Jailer Box Office: ஜெயிலர் முதல் நாள் வசூல் 150 கோடியா..? மசால் வடை மசால் வடை தான்யா!!
சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் இரு தினங்களுக்கு முன்னர் ரிலீஸானது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.
இதன்மூலம் ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் 'மசால் வடை மசால் வடை தான்யா' என ஜெயிலர் பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்டை கலாய்த்துள்ளனர்.

மசால் வடை மசால் வடை தான்யா: அண்ணாத்த படத்துக்குப் பின்னர் ரஜினி நடித்த ஜெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தலைவரின் தரிசனத்தைப் பார்க்க ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தனர். அதனை ரஜினி - நெல்சன் காம்போ நிறைவேற்றியுள்ளதாகவே ரசிகர்கள் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.
ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் நடித்துள்ளதும் படத்துக்கு ஹைப் கொடுத்துள்ளது. முழுக்க முழுக்க ரஜினியின் ஃபேன்பாய் சம்பவமாக ஜெயிலர் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன். இதனால், ஜெயிலர் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல் பாதியில் பூனையாக அடக்கி வாசிக்கும் ரஜினி, இரண்டாம் பாதியில் புலியாக ஆக்ஷனில் மிரட்டியுள்ளார்.
முதல் நாளில் இருந்தே ஜெயிலர் படத்திற்கு தரமான ஓபனிங் கிடைத்துள்ளது. இதனால் முதல் நாளில் 70 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது நாளில் 100 கோடி வரை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், ஜெயிலர் முதல் நாள் வசூல் 150 கோடி என ரஜினி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனையை ரஜினி ஜெயிலர் படத்தின் மூலம் நிகழ்த்தியுள்ளதாக அவரது ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால், ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து இதுவரை அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஜெயிலர் வசூல் நிலவரம் குறித்து ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.
ஒரேநாளில் 150 கோடி வசூல் என்பதெல்லாம் சுத்த கட்டுக் கதை என்பதாக ட்வீட் போட்டுள்ள அவர், வடிவேலுவின் மீம்ஸ்ஸையும் ஷேர் செய்துள்ளார். 'மசால் வடை மசால் வடை தான்யா!!' என்ற கேப்ஷனுடன் ட்வீட் செய்து ரஜினி ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளார். இதனைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











