Jailer Box Office: ‘செவ்வாய் கிரகத்துல ஜெயிலர் வசூல் தெரியல...' பிரபலத்தை கோர்த்துவிட்ட ப்ளூ சட்டை
சென்னை: ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் அபிஸியல் பாக்ஸ் ஆபிஸ் அப்டேட் தற்போது வெளியானது. சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளதன் படி ஜெயிலர் ஒரு வாரத்தில் 375 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இதனையடுத்து ஜெயிலர் வசூல் குறித்து இதுவரை வெளியான அப்டேட்களை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக சந்திர மண்டலம், செவ்வாய் கிரகத்தில் ஜெயிலர் வசூல் என்னவென்றும் அவர் கலாய்த்து ஒரு வீடீயோவை ஷேர் செய்துள்ளார்.

செவ்வாய் கிரகத்துல ஜெயிலர் வசூல் தெரியுமா..?
சூப்பர் ஸ்டார் ரஜினி - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவான ஜெயிலர், கடந்த வாரம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் ப்ராஜெக்ட் பற்றிய அறிவிப்பு வெளியானது முதலே இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த பெரிதாக சக்சஸ் ஆகவில்லை. இதனால் ஜெயிலர் படத்துக்கு இன்னும் நெருக்கடி காணப்பட்டது. இந்நிலையில் 10ம் தேதி வெளியான ஜெயிலர் முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்தது. இதனால் முதல் நாளில் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல், கடந்த ஒரு வாரத்துக்கான வசூல் குறித்தும் சினிமா விமர்சகர்கள் அப்டேட் கொடுத்து வந்தனர்.
ஆனால், தற்போது சன் பிக்சர்ஸ் சார்பில், ஜெயிலர் படத்தின் ஒரு வாரம் வசூல் 375 கோடி ரூபாய் என அறிவித்துள்ளது. இதனை ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து கலாய்த்து வருகிறார். எற்கனவே ஜெயிலர் வசூல் நிலவரம் எல்லாம் 'வடை' என ட்ரோல் செய்து வந்தார். இப்போது அபிஸியல் அப்டேட் வெளியானதால் அவர் வெறித்தனமாக ட்ரோல் செய்யத் தொடங்கிவிட்டார். அதாவது திருச்சி தியேட்டர் ஓனர் ஸ்ரீதர் ஜெயிலர் வசூல் குறித்து உண்மையை அப்படியே கூறிவிட்டார்.
அதாவது ஜெயிலர் படத்திற்கு அமெரிக்காவில் பெரிதாக வரவேற்பு இல்லை என்பதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள அவரது உறவினர் முதல் நாளில் ஜெயிலர் படத்தை பார்த்ததாகவும், அப்போது ஒரு டிக்கெட்டின் விலை 20 டாலர் இருந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், மூன்று நாட்களுக்குப் பின்னர் டிக்கெட் விலையை 14 டாலர்கள் என குறைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இன்னொரு நண்பர் அமெரிக்காவில் உள்ள ஒர் தியேட்டரில் 20 பேர் தான் படம் பார்த்ததாகவும் ஸ்ரீதரிடம் கூறியுள்ளார்.

அதனால், அமெரிக்காவில் ஜெயிலருக்கு பெரிதாக வசூல் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என தியேட்டர் ஓனர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். மேலும், சந்திர மண்டலம், செவ்வாய் கிரகத்துல ஜெயிலர் வசூல் என்னன்னு தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் 100 கோடி மட்டும் தான் வசூல் செய்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "அமெரிக்க பாக்ஸ் ஆபீஸை கலக்கி வரும் ஜெயிலர். அதிர்ச்சியில் அவதார் இயக்குநர். களநிலவரம் என்ன? திருச்சி தியேட்டர் ஓனர் ஸ்ரீதர் பேட்டி" என கேப்ஷன் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











