Jailer Box Office Prediction: முதல் நாளே 100 கோடியை தாண்டும்.. ஜெயிலர் வசூல் கணிப்பு இதோ!

சென்னை: பீஸ்ட் படத்தின் மூலம் இயக்குநர் நெல்சன் எந்தளவுக்கு ட்ரோல் செய்யப்பட்டாரோ தற்போது ஜெயிலர் படத்தின் புக்கிங்கை பார்த்து அந்தளவுக்கு சந்தோஷத்தில் மிதப்பார் என தெரிகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருகிறது.

Jailer Box Office Predictions says Rajinikanth movie will enter 100 crore club on its first day

தமிழ்நாட்டில் வலிமை படம் அதிகமாக ஈட்டிய முதல் நாள் வசூலை ஜெயிலர் படம் எளிதில் முறியடிக்கும் என எதிர்பார்க்கும் நிலையில், முதல் நாளே 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனையை நிகழ்த்த வாய்ப்புகள் அதிகம் என்றும் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

மூன்று முகம் லுக்கில்: நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் மூன்று முகம் லுக்கில் அதகளம் செய்ய காத்திருக்கிறார் என அதிரடியாக ஒரு போஸ்டர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஜெயிலர் படம் நாளை வெளியாக உள்ள நிலையில், டிக்கெட் புக்கிங் மற்றும் கூடுதல் காட்சிகள் என தியேட்டர்களும் சந்தோஷத்தில் மிதந்து வருகின்றன.

Jailer Box Office Predictions says Rajinikanth movie will enter 100 crore club on its first day

இமயமலை சென்ற ரஜினி: கடந்த 4 ஆண்டுகளாக இமயமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் செல்லாமல் இருந்து வந்த நிலையில், அதனால் தான் அவர் நடித்த படங்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை என்கிற பேச்சுக்களும் கிளம்பின. சமீபத்தில், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ரஜினிகாந்தால் இமயமலைக்கு போக முடியாது என பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தனர். இந்நிலையில், ஜெயிலர் படத்தின் ஸ்பெஷல் ஷோவை சன் ஸ்டூடியோவில் பார்த்த ரஜினிகாந்த் இமயமலைக்கு கிளம்பிப் போயுள்ளார்.

Jailer Box Office Predictions says Rajinikanth movie will enter 100 crore club on its first day

100 கோடி வசூல்: லைகா தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் முதல் நாளிலேயே 80 கோடி வசூல் செய்தது என லைகா போஸ்டரை வெளியிட்ட நிலையில், ஜெயிலர் படத்தின் புக்கிங் அதை விட அதிகமாக இருக்கும் நிலையில், முதல் நாளே தமிழ்நாட்டில் 40 கோடி ரூபாயும், உலகளவில் 100 கோடி வசூலையும் ஜெயிலர் திரைப்படம் அடைந்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X