Jailer Box Office: பாக்ஸ் ஆபிஸில் படுத்தேவிட்டதப்பா ஜெயிலர்... 10வது நாள் கலெக்‌ஷன் இவ்வளவு தானா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் கடந்த வரம் வெளியானது.

இந்தப் படத்திற்கு உலகம் முழுவதும் முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்தது.

இதனால், ஜெயிலர் வசூல் முதல் ஒருவாரத்தில் 375 கோடி ரூபாயை கடந்தது.

இந்நிலையில் இரண்டாவது வாரத்தில் இருந்து வசூலில் தடுமாறி வரும் ஜெயிலரின் நேற்றைய பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் ரொம்பவே மோசமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

 Jailer Box Office: Rajinis Jailer has collected only Rs 20 crores on its 10th day

ஜெயிலர் 10வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இளம் இயக்குநரான நெல்சனுடன் முதன்முறையாக கூட்டணி வைத்திருந்தார் ரஜினி. ஆக்‌ஷன் ப்ளஸ் பக்கா கமர்சியல் படமாக உருவான ஜெயிலர், சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸானது.

தொடர் விடுமுறை காரணமாக முதல் ஒரு வாரத்துக்கான டிக்கெட் புக்கிங் வேகமாக நடைபெற்றது. இதனால், முதல் நாளில் இருந்தே ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் உச்சம் தொட்டது. மேலும் முதல் நாளிலேயே வசூல் 100 கோடியை தொட்டுவிட்டதாக சோஷியல் மீடியா ட்ராக்கர்கள் கூறினர். முதல் வாரம் சினிமா ட்ராக்கர்கள் கொடுத்த அப்டேட் படி 500 கோடியை தொட்டது ஜெயிலர் வசூல்.

ஆனால், சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து வெளியான அபிஸியல் அப்டேட்டில், முதல் வாரம் 375 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ஜெயிலர் கலெக்‌ஷன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 15ம் தேதி விடுமுறைக்குப் பிறகு குறைந்துவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 8வது நாளில் உலகம் முழுவதும் 20 கோடியும், 9வது நாளில் 25 கோடியும் வசூலித்துள்ளது.

அதேபோல், ஜெயிலர் வெளியாகி 2வது சனிக்கிழமையான நேற்று 20 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆகமொத்தம் இதுவரை 10 நாட்களில் 450 கோடி ரூபாய் வசூலித்துள்ளது ஜெயிலர். முதல் வாரத்தில் இருந்த வேகம் அதன்பின்னர் சுத்தமாக குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 180 கோடி ரூபாய் வரையும், தமிழ்நாடு உட்பட இந்திய முழுவதும் 250 முதல் 275 கோடி வரையும் கலெக்‌ஷன் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இரண்டாவது வாரத்திலேயே ஜெயிலர் படத்தின் வசூல் தரை தட்டிய கப்பலாக தடுமாறி வருகிறது. முதல் நாளில் இருந்த ஓபனிங் சுத்தமாக இல்லையென்பதால், இனிவரும் நாட்களில் வசூல் நிலைமை இன்னும் மோசமாக என சொல்லப்படுகிறது. அதேபோல், வசூல் குறைந்துவிட்டதால் ஸ்க்ரீன்களின் எண்ணிக்கையை குறைக்கவும் தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துவிட்டார்களாம். இதனால், ஒரே மாதத்தில் ஜெயிலர் ஓடிடியில் வெளியானாலும் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X