Jailer Box Office: பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் இருந்து வெளியேறும் ஜெயிலர்... படுமோசமான வசூல் நிலவரம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குகளில் வெளியானது.

கடந்த வாரம் 10ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு முதல் வாரம் மட்டுமே நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதாம்.

தொடர் விடுமுறை காரணமாக முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸில் தாக்குப்பிடித்த ஜெயிலர் வசூல், இரண்டாவது வாரத்தில் மிக மோசமாகியுள்ளதாம்.

படம் வெளியான இரண்டாவது வார இறுதியில் கூட எதிர்பார்த்த வசூல் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் இருந்து ஜெயிலர் வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

 Jailer Box Office: Rajinis Jailer has collected only Rs 20 crores on its 11th day

ஜெயிலர் 11வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸானது. இந்தப் படம் வெளியாகும் முன்பே ப்ரீ டிக்கெட் புக்கிங்கில் வசூல் சாதனை படைத்தது. குறிப்பாக அட்வான்ஸ் புக்கிங் மூலம், முதல் நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. அதேபோல், அமெரிக்கா உட்பட மேலும் சில வெளிநாடுகளிலும் ஜெயிலருக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது.

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஜெயிலர் அறிவிப்பு வெளியானது முதல் க்ளிம்ப்ஸ், டீசர், காவாலா சாங், டைகர் கா ஹுக்கும், ஜுஜுபி பாடல்கள் என ஜெயிலர் படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்தது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவும் ரசிகர்கள் மத்தியில் படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தன.

இதனால், முதல் வாரம் ஜெயிலர் ஃபீவர் உச்சத்தில் இருந்தது. தியேட்டர்களுக்கு ரசிகர்கள் தங்கள் குடும்பத்தினருடன் படையெடுத்து வந்தனர். ஒருபக்கம் ஜெயிலர் வசூல் குறித்து சோஷியல் மீடியா ட்ராக்கர்கள் பயங்கரமாக உருட்டி வந்தனர். அதாவது முதல் மூன்று நாட்களிலேயே ஜெயிலர் வசூல் 300 கோடி ரூபாய்யை கடந்துவிட்டது எனவும், முதல் வாரம் முடிவில் 500 கோடியை நெருங்கிவிட்டதாகவும் கூறி வந்தனர்.

ஆனால், சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து வெளியான அபிஸியல் அப்டேட்டில், முதல் வாரம் 375 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இரண்டாவது வாரத்தில் ஜெயிலர் வசூல் பாக்ஸ் ஆபிஸை ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதற்கும் ரஜினியே ஆப்பு வைத்துக்கொண்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேசம் சென்றிருந்த ரஜினி, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

 Jailer Box Office: Rajinis Jailer has collected only Rs 20 crores on its 11th day

இந்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது முதல், ஜெயிலர் டிக்கெட் புக்கிங், ரசிகர்களின் வருகை அனைத்தும் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஜெயிலர் மொத்தமே 18 கோடி ரூபாய் தான் வசூலித்துள்ளதாம். அதற்கு முந்தைய தினமான சனிக்கிழமை 20 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகமொத்தம் இதுவரை 11 நாட்களில் 470 கோடி ரூபாய் வசூலித்துள்ளது ஜெயிலர்.

முதல் வாரத்தில் இருந்த வேகம் அதன்பின்னர் சுத்தமாக குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாய் வரையும், தமிழ்நாடு உட்பட இந்திய முழுவதும் 250 முதல் 290 கோடி வரையும் கலெக்‌ஷன் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் அமெரிக்காவில் இதுவரை ஜெயிலர் திரைப்படம் 5 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. ரஜினியின் உபி பயணம் ஜெயிலர் படத்தின் வசூலுக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், இனிவரும் நாட்களில் பெரிதாக கலெக்‌ஷன் இருக்காது என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X