Jailer Box Office: ஒரே வாரத்தில் ஆட்டம் கண்ட ஜெயிலர்... 8வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவு தானா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார் உளிட்ட பலர் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது.
ரசிகர்களின் அலப்பறையுடன் நல்ல ஓபனிங் பெற்ற இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸிலும் கோடிகளில் வசூலித்தது.

முதல் வாரம் 375 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 8வது நாளில் ஜெயிலர் வசூல் ஆட்டம் கண்டுவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயிலர் 8வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். கோலிவுட் சூப்பர் ஸ்டாருடன் மற்ற மொழி சூப்பர் ஸ்டார்களும் நடித்திருந்ததால், ரசிகர்களிடம் அதிக ஹைப் காணப்பட்டது.
இவர்கள் தவிர ரம்யாகிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உட்பட மேலும் பலர் நடித்திருந்தனர். முதன்முறையாக இணைந்த சூப்பர் ஸ்டார், நெல்சன், அனிருத் காம்போ, ஜெயிலர் படத்தை ரசிகர்களுக்கு ஃபேன்பாய் சம்பவமாக கொடுத்தது. இதனால், இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து ரஜினி ரசிகர்கள், சோஷியல் மீடியா சினிமா ட்ராக்கர்கள் அப்டேட் செய்து வந்தனர்.
அதன்படி முதல் நாளில் 100 கோடி, இரண்டே நாளில் 300 கோடி, முதல் வாரம் முடிவிற்குள் 500 கோடி வசூல் என செம்மையாக உருட்டி வந்தனர். இதனை ப்ளூ சட்டை மாறன் மட்டும் கடுமையாக ட்ரோல் செய்து வந்தார். ஜெயிலரின் உண்மையான வசூல் நிலவரம் இது அல்ல என்றும், இந்தப் படத்துக்கு பெரியளவில் ஓபனிங் கிடைக்கவில்லை எனவும் கூறி வந்தார்.
இந்நிலையில் நேற்று ஜெயிலர் வசூலை அபிஸியலாக அறிவித்தது சன் பிக்சர்ஸ். அதன்படி இந்தப் படம் ஒரு வாரத்தில் 375 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட உலகம் முழுவதும் மொத்த வசூலே 375 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சமூக வலைத்தளங்களில் ஜெயிலர் முதல் வாரம் 500 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து 8வது நாள் வசூல் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தின் நேற்றையை வசூல் உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. ஆகமொத்தம் முதல் 8 நாட்களில் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாம் ஜெயிலர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி ரூபாய் வரை இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து பயங்கரமாக உருட்டி வந்த சோஷியல் மீடியா ட்ராக்கர்கள், நேற்றைய அபிஸியல் அப்டேட்டிற்குப் பின்னர் அப்படியே அடங்கிவிட்டனர். அதேநேரம், ஜெயிலர் தான் கோலிவுட்டில் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











