Jailer Box Office: காத்துவாங்கும் ஜெயிலர் திரையரங்குகள்... 2வது வாரம் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ!
சென்னை: கடந்த 10ம் தேதி வெளியான ஜெயிலர் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆரம்பத்திலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலருக்கு நல்ல ஓபனிங் கிடைத்ததால், முதல் வாரம் 375 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
ஆனால், இரண்டாவது வாரத்தில் நிலைமை படுமோசமானதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், ஜெயிலர் வெளியான இரண்டு வாரங்களில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற நிலவரம் தற்போது தெரியவந்துள்ளது.

ஜெயிலர் 2வது வாரம் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ரஜினிக்கு கம்பேக் கொடுக்கும் படமாக ஜெயிலர் இருக்கும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். அவர்களை ஏமாற்றாமல் ஃபேன் பாய் சம்பவமாக ஜெயிலர் படத்தை இயக்கியிருந்தார் நெல்சன். ஆக்ஷன் காட்சிகளில் அதிகமான வன்முறை இருந்த போதும், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது ஜெயிலர்.
அதேபோல் விமர்சன ரீதியாகவும், பாசிட்டிவ், நெகட்டிவ் என கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ரஜினியின் மாஸ், ஸ்டைல் என அவரது தனித்துவத்தை கடந்து, படத்தில் எதுவும் பெரிதாக ஈர்க்கவில்லை. அதேநேரம் கேமியோ ரோலில் நடித்த சிவராஜ்குமார், கோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். பக்கா கமர்சியல் எலிமெண்ட்ஸ் மட்டுமே ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
மற்றபடி கதை, திரைக்கதை போன்றவற்றில் நெல்சன் ஜஸ்ட் பாஸ் ஆகியிருந்தார். ஜெயிலரில் பல குறைகள் இருப்பினும் ரஜினியின் மேஜிக் காரணமாக ஓபனிங் சிறப்பாக அமைந்தது. அதன்படி, முதல் வாரம் உலகம் முழுவதும் 375 கோடி ரூபாய் வசூலித்ததாக சன் பிக்சர்ஸ் அபிஸியலாக அறிவித்தது. அதேநேரம் சோஷியல் மீடியா ட்ராக்கர்கள் முதல் வாரம் ஜெயிலர் வசூல் 500 கோடி என உருட்டி வந்தனர். இந்நிலையில் முதல் வாரத்துக்குப் பின்னர் ஜெயிலர் நிலைமை மிக மோசமானது.
உத்தரபிரதேசம் சென்றிருந்த ரஜினி, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையானது. இதனால் தமிழ்நாட்டில் ஜெயிலர் டிக்கெட் புக்கிங், ரசிகர்களின் வருகை குறைந்துவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தரப்பில் சொல்லப்பட்டது. இதனால் வசூலும் ரொம்பவே குறைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி, 8வது நாளில் இருந்து 30 கோடி, 20 கோடி, 10 கோடி என ஒவ்வொரு நாளும் ஜெயிலர் வசூல் குறைந்தது.
இறுதியாக நேற்று ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் வெறும் 3 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது ஜெயிலர். இதனால் ஜெயிலர் திரைப்படம் முதல் 2 வாரங்களுக்குள் பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் இருந்தே வெளியேறிவிட்டது. மொத்தமாக இரண்டு வாரங்களில் 550 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். முதல் வாரம் 375 கோடி வசூலித்த ஜெயிலர், இரண்டாவது வாரத்தில் வெறும் 175 ரூபாய் மட்டுமே கலெக்ஷன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications