Jailer Box Office: ஜெயிலர் வசூல் இவ்வளவு தானா... அபிஸியல் அப்டேட்டை பார்த்து ரசிகர்கள் கலக்கம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸானது. இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களுடன் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமே நடந்தது. இந்நிலையில், தற்போது சன் பிக்சர்ஸ் தரப்பில் அபிஸியலாக அறிவிக்கப்பட்ட ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் ரஜினி ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் அபிஸியல் அப்டேட் : ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் 10ம் தேதி ரிலீஸானது. சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உட்பட பலதரப்பினரும் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி, உலகம் முழுவதும் ஜெயிலர் படத்துக்கு முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்தது. அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் சிறப்பான வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
அதன்படி முதல் நாளில் இந்தியாவில் 50 கோடியும், உலகம் முழுவதும் 65 கோடியும் வசூலித்ததாக சொல்லப்பட்டது. அதேபோல் இரண்டாவது, மூன்றாவது நாட்களிலும் ஜெயிலர் வசூல் மாஸ் காட்டுவதாக பிரபல சினிமா விமர்சகர்கள் டிவிட்டரில் அப்டேட் செய்து வந்தனர். ஆனால், ப்ளூ சட்டை மாறன் மட்டும் தொடர்ந்து ஜெயிலர் வசூல் குறித்து ட்ரோல் செய்து வந்தார். அதேபோல், சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்தும் அபிஸியல் அப்டேட் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று ஜெயிலர் படத்தின் சக்சஸ் குறித்து ஒரு ப்ரோமோ வீடியோவை மட்டும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. அப்போதே ப்ரோமோவை விட பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து இன்று ஜெயிலர் வசூலை அபிஸியலாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். அதன்படி இந்தப் படம் ஒரு வாரத்தில் 375 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட உலகம் முழுவதும் மொத்த வசூலே 375 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சினிமா விமர்சகர்களோ ஜெயிலர் வசூல் 500 கோடி, 600 கோடி என உருட்டி வந்தனர். ஆனால் அபிஸியலாகவே 375 கோடி தான் என்ற அறிவிப்பு வந்ததும் ரஜினி ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். கமலின் விக்ரம் பட கலெக்ஷனை முறியடித்துவிட்டதாக நினைத்த ரஜினி ரசிகர்களுக்கு, இது ஏமாற்றமாக அமைந்துள்ளது.
அதேபோல், அடுத்து விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது. இது உறுதியாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. அதனால், இதுவும் ரஜினியின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதேநேரம் முதல் வாரத்தில் 400 கோடியை நெருங்கிவிட்ட ஜெயிலர் வசூல், வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











