Jailer Audio Launch - ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஃபீல் பண்ணக்கூடாதுனு ரஜினி செய்த செயல் என்ன தெரியுமா?
சென்னை: Jailer Audio Launch Show [ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா] ஜெயிலர் ஷூட்டிங்கின்போது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கஷ்டப்படக்கூடாது என ரஜினி செய்த செயல் அனைவரையும் நெகிச்சியடைய செய்திருக்கிறது.
ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் தலைவர் கம்பேக் கொடுத்து அவரை பற்றி பேசியவர்களின் வாயை மூட வைப்பார் என அவரது ரசிகர்கள் பெரும் நம்பிக்கையோடு இருக்கின்றனர். பான் இந்தியா அளவில் படம் உருவாகியிருக்கிறது.

நட்சத்திர பட்டாளம்: படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. நெல்சனின் மேக்கிங்கில் டார்க் காமெடி இருக்கும் என்பதாலும் அந்த டோனில் ரஜினியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.
டிக்கெட் புக்கிங்: வெளிநாடுகளில் சில நாட்களுக்கு முன்னதாகவே ஜெயிலர் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கிவிட்டது. அங்குள்ள ரசிகர்கள் ஆவலோடு டிக்கெட்டை புக் செய்துவருகின்றனர். அதேபோல் இந்தியாவில் இன்று படத்துக்கான டிக்கெட் புக்கிங் ஆரம்பித்திருக்கிறது. ரஜினியின் வெறித்தனமான ரசிகர்கள் புக் செய்துகொண்டே இருக்கின்றனர். பத்தாம் தேதி காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது.
இசை வெளியீட்டு விழா: இதற்கிடையே படத்தின் ஆடியோவும், ட்ரெய்லரும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அதேபோல் ஆடியோ வெலியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சும் பெரும் ட்ரெண்டானது. இந்தச் சூழலில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயிலர் படத்தின் கேமரா மேன் விஜய் கார்த்திக் கண்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.
என்ன நடந்தது?: விழாவில் பேசிய விஜய் கார்த்திக் கண்ணன், "நான் தலைவரோடு பெரிய ரசிகன். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாள் வெயிலில் 300 பேரை வைத்து ஒரு சீன் எடுத்துக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு ஜூனிய ஆர்ட்டிஸ்ட்டுக்கு சின்ன வசனம்தான். ஆனால் அவர் அதை ஒழுங்காக பேசவில்லை. எனவே அவருக்கு பதிலாக இன்னொருவரை வைத்து எடுத்துவிட்டோம். ஷூட்டிங்கிற்கு பிரேக்கும் விடப்பட்டது.
ரஜினியின் செயல்: பிரேக்கில் நானும், நெல்சன் திலீப்குமாரும் மானிட்டரில் அமர்ந்திருந்தோம். அப்பொது ஒரு உதவி இயக்குநர் எங்களிடம் வந்து அந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டை சார் கூப்பிடுகிறா என்றார். பிறகு ரஜினி சார் எங்களிடம், அவர் என்கூட நடிக்க வேண்டும் என ஆசையாக இருந்திருப்பார். வீட்டிலும் சொல்லியிருப்பார். இப்போ அது இல்லை என்றால் ஃபீல் செய்வார். எனவே அடுத்த சீனில் அவரை என் பக்கத்தில் நிற்க வையுங்கள். அவரது தோளில் சும்மா கைப்போட்டுக்கொண்டு நிற்கிறேன் என சொன்னார். அவர் எல்லோரிடமும் பணிவோடு இருக்கிறார். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்" என்றார். இந்தத் தகவல் ரஜினி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











