Jailer Collection: விக்ரம் வசூலை நெருங்க முடியாத ஜெயிலர்... சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனையா இது..?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது.

இந்தப் படம் இரண்டு வாரங்களில் 525 கோடி வரை வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்தாண்டின் மிகப் பெரிய வெற்றி படமான ஜெயிலர், கமலின் விக்ரம் சாதனையை இன்னும் முறியடிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

அதாவது தமிழ்நாட்டில் இதுவரை விக்ரம் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருப்பதாக ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

 Jailer Collection: Jailer Tamil Nadu collection lagging behind Vikram film

விக்ரம் வசூலை நெருங்க முடியாத ஜெயிலர்: கோலிவுட்டின் உச்ச நடிகரான ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த 10ம் தேதி ரஜினியின் ஜெயிலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. நெல்சன் இயக்கிய ஜெயிலர் சூப்பர் ஸ்டாருக்கு கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்தது. இதனால் உலகம் முழுவதும் முதல் நாளில் இருந்தே சிறப்பான ஓபனிங் கிடைத்தது.

ரஜினி நடிப்பில் ஜெயிலருக்கு முன்பு வெளியான அண்ணாத்த பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அதற்கெல்லாம் சேர்த்து வைத்து ஜெயிலரில் வசூலித்துக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார். அண்ணாத்த, ஜெயிலர் என இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 10ம் தேதி சிங்கிளாக களமிறங்கிய ஜெயிலர் திரைப்படம் முதல் வாரம் 375 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

அதேநேரம், ஜெயிலர் இரண்டாவது வாரம் வசூல் மொத்தமே 150 கோடி ரூபாய் என படக்குழு அறிவித்துள்ளது. அதாவது 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை உலகம் முழுவதும் 150 கோடி தான் வசூல் கிடைத்துள்ளது. இது முதல் வாரத்தின் கலெக்‌ஷனை விட ரொம்பவே குறைவு. இருப்பினும் முதல் இரண்டு வாரங்களையும் சேர்த்து மொத்தம் 525 கோடி வசூலித்துள்ளது ஜெயிலர். இந்தாண்டு வெளியான படங்களில் ஜெயிலர் தான் பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

ஆனாலும், கடந்தாண்டு வெளியான கமலின் விக்ரம் படத்தோடு ஒப்பிடுகையில், ரஜினியின் ஜெயிலர் இன்னும் பின்தங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது கமலின் விக்ரம் தமிழ்நாட்டில் 176 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் தெரிவிக்கின்றன. ரஜினியின் ஜெயிலர் திரைப்படமோ இதுவரை 163 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. ஆனால், விக்ரம் சாதனையை வரும் வாரத்தில் ஜெயிலர் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கேரளா பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. கேரளாவில் ஜெயிலர் படத்தின் முதல் இரண்டு வார வசூல் 50 கோடியை கடந்துள்ளதாம். இதுவரை எந்த தமிழ்ப் படமும் செய்யாத சாதனையை சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் நிகழ்த்தியுள்ளதாக கேரள பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X