Jailer Collection: ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்... ஆல் ஏரியாலயும் லைஃப் டைம் செட்டில்மெண்ட்!!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது.
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள ஜெயிலர், இதுவரை 500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு உட்பட மற்ற மாநிலங்களிலும் உலகம் முழுவதும் ஜெயிலர் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆல் ஏரியாலயும் லைஃப் டைம் செட்டில்மெண்ட்: அண்ணாத்த படத்துக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர், கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான பேட்ட, தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால், ஜெயிலர் படத்தின் சக்சஸ் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்களுடன் தமிழ்த் திரையுலகமும் காத்திருந்தது.
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் படத்தில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முக்கியமாக மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இதனால் பக்கா கமர்சியல் ஜானர் படமாக வெளியான ஜெயிலர், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ரஜினியின் மாஸ் & கிளாஸ் படம் ஜெயிலர் என ரசிகர்கள் கொண்டாடினர்.
அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் ஜெயிலர் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 375 கோடி ரூபாய் வரை வசூலித்த ஜெயிலர், இரண்டாவது வாரம் 150 கோடி கலெக்ஷன் செய்தது. அதன்படி முதல் இரண்டு வாரங்களையும் சேர்த்து மொத்தம் 525 கோடி வசூலித்துள்ளது ஜெயிலர். இரண்டு வாரங்களுக்குப் பின்னரும் வசூலில் குறை வைக்காத ஜெயிலர், இதுவரை மொத்தமாக 561 கோடி கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு உட்பட மற்ற ஏரியாக்களில் ஜெயிலர் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 185 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். இதன்மூலம் கமலின் விக்ரம் பட வசூல் சாதனையை ஜெயிலர் பிரேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களான டோலிவுட் ஏரியாக்களில் ஜெயிலர் மொத்தம் 85 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 60 கோடி ரூபாயும், கேரளாவில் 46 முதல் 50 கோடி வரையும் கலெக்ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் வட இந்திய மாநிலங்களில் மொத்தமே 10 கோடி ரூபாய் தான் வசூல் செய்துள்ளதாம். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் மொத்தம் 386 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷன் செய்துள்ளது ஜெயிலர். இந்தியா தவிர்த்து உலகின் மற்ற நாடுகளில் 175 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாம். இதில் அமெரிக்காவில் மட்டும் 5 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











