ஜெயிலர் 500 கோடி வசூல் என டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்.. கப்சிப் என இருக்கும் சன் பிக்சர்ஸ்!

சென்னை: ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் 10வது நாளிலும் ஏகப்பட்ட திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த புதனன்று முதல் வார முடிவில் ஜெயிலர் திரைப்படம் 375 கோடி வசூலை கடந்தது என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால், அதற்கு முன்னதாகவே மனோபாலா, ரமேஷ் பாலா உள்ளிட்ட பல டிராக்கர்கள் 400 கோடி என்றும் 450 கோடி என்றும் வசூல் கணக்குகளை கூறினர்.

Jailer crosses 500 Crore at Box Office hashtag trending in social media

அதெல்லாம் வடை என ப்ளூ சட்டை மாறன் ஒரு பக்கம் உயிரைக் கொடுத்து ட்வீட்களை போட்டு கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில், 10வது நாளில் ஜெயிலர் திரைப்படம் 500 கோடி வசூலை தாண்டி பொன்னியின் செல்வன் வசூலையே வீழ்த்தி விட்டது என ரஜினி ரசிகர்கள் #JailerHits500cr ஹாஷ்டேக் போட்டு அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

500 கோடி டிரெண்டிங்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 10 நாட்களில் 500 கோடி வசூலை கடந்து விட்டதாக #JailerHits500cr ஹாஷ்டேக் போட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் நேற்று மாலை முதல் கிளம்பிய நெகட்டிவ் டிரெண்டிங்கை சரி கட்ட முயற்சித்து வருகின்றனர்.

Jailer crosses 500 Crore at Box Office hashtag trending in social media

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், மீண்டும் ஜெயிலர் டிரெண்டிங்கை ரஜினி ரசிகர்கள் ஆரம்பித்துள்ளனர்.

Jailer crosses 500 Crore at Box Office hashtag trending in social media

சன் பிக்சர்ஸ் அமைதி: 375 கோடிக்கு பிறகு 400 கோடி வசூல் பெற்ற அப்டேட்டை கூட இன்னமும் சன் பிக்சர்ஸ் வெளியிடாத நிலையில், அதற்குள் அதிரடியாக 500 கோடி வசூலை ஜெயிலர் திரைப்படம் கடந்து விட்டதாகவும், விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் வசூலை முறியடித்து தமிழ் சினிமாவின் புதிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக ஜெயிலர் படம் மாறியுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், சன் பிக்சர்ஸ் வெறுமனே ரெக்கார்டு மேக்கர் ரஜினிகாந்த் என்கிற ட்வீட்டை மட்டும் போட்டு வசூல் கணக்கை அறிவிக்காமல் அமைதியோ அமைதி என அமைதி காத்து வருகிறதே ஏன் என்கிற விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. ஞாயிற்றுக்கிழமை வசூலுடன் சேர்த்து நாளை ஒட்டுமொத்த வசூலை சன் பிக்சர்ஸ் வெளியிடுமா என்கிற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X