Jailer: ஜெயிலர் வில்லன் ரோலுக்கு ஸ்கெட்ச் போட்ட தனுஷ், சிவகார்த்திகேயன்..? இது என்ன புது உருட்டு..?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினியின் மகனாகவும் வில்லன் கேரக்டரிலும் வசந்த் ரவி நடித்துள்ளார்.

 Jailer: Dhanush and Sivakarthikeyan tried to play the villain character in Jailer

வசந்த் ரவியின் கேரக்டர் ரசிகர்களுக்கே சர்ப்ரைஸ்ஸாக அமைந்திருந்தது.

ஆனால், இந்த கேரக்டரில் நடிக்க தனுஷ், சிவகார்த்திகேயன் இடையே போட்டி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

தனுஷ், சிவகார்த்திகேயனின் ஆசை..! சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன்படி திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ரஜினியின் மாஸ் சம்பவம் என ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முதல் பாதி திரைக்கதை செம்மையாக இருந்ததாகவும், இரண்டாம் பாதி கொஞ்சம் போரிங் எனவும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனாலும் ரஜினியின் ஸ்டைலும் நடிப்பும் இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்துள்ளது. ஜெயிலரில் ரஜினியின் மகனாக வசந்த் ரவி நடித்துள்ளார். தரமணி, ராக்கி படங்கள் மூலம் கவனம் ஈர்த்த வசந்த் ரவிக்கு ஜெயிலர் எதிர்பாராத சர்ப்ரைஸ் என சொல்லப்படுகிறது.

அதாவது மகனுக்காக வில்லன்களை வேட்டையாடும் ரஜினிக்கு கடைசியில் வசந்த் ரவி மெயின் வில்லன் என தெரியவருவது சர்ப்ரைஸ்ஸாக உள்ளதாம். இருப்பினும் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு வசந்த் ரவி ஒர்த் இல்லையென ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே இப்படத்தில் ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிப்பதாக ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெற்ற போது செய்திகள் வெளியாகின.

சிவகார்த்திகேயனுக்கும் இது நீண்டநாள் கனவு என்பதால், அவரது நண்பரும் இயக்குநருமான நெல்சன் இந்த வாய்ப்பை கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டது. பின்னர் ஜெயிலரில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை, அவர் ஒரு பாடல் மட்டும் எழுதியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், கடைசியில் எதுவுமே இல்லாமல் போனதுதான் மிச்சம். அதாவது சிவகார்த்திகேயன் ஆசைப்பட்டது உண்மைதான் என்றாலும், அதற்கு ரஜினி நோ சொல்லிவிட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.

முன்னதாக ஐஸ்வர்யாவுடன் ஒன்றாக வாழ்ந்த போது தனுஷுக்கும் இந்த ஆசை இருந்ததாம். காலா படத்தின் போதே இயக்குநர் பா ரஞ்சித்திடம் தனுஷ் நேரடியாக கேட்டதாகவும், ஆனால், ரஜினி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ரஜினியுடன் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என ஆசைப்பட்ட தனுஷ், கடைசியில் அது நடக்காமல் போனதால் ஏமாற்றமடைந்தார். அதேபோல் இப்போதும் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்க தனுஷ் விரும்பியதாக சொல்லப்பட்டது.

ஆனால், அது உண்மையில்லை என்றும், ஜெயிலர் படம் தொடங்கும் முன்பே வசந்த் ரவியை தான் நெல்சனும் ரஜினியும் டிக் செய்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X