Jailer - ஜெயிலரால்தான் கடனாளி ஆகிவிட்டேன்.. ரஜினியிடம் கோரிக்கை வைத்த இயக்குநர்

சென்னை: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் படத்தின் இயக்குநர் ரஜினிகாந்த்திடம் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்.

அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், யோகிபாபு, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஆகஸ்ட் 10ஆம் தேதி பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

Jailer Director has a request to Rajinikanth

காவாலா: படத்திலிருந்து முதல் சிங்கிள் சில வாரங்களுக்கு முன்னதாக வெளியானது. ரஜினிகாந்த்தின் படத்திலிருந்து சிங்கிள் வெளியாவதால் நிச்சயம் தலைவர் சம்பவமாகத்தான் இருக்கும் என அவரது ரசிகர்கள் ஆவலோடு பார்த்தனர். ஆனால் அவர்களது ஆவல் அனைத்தையும் தமன்னா தவிடு பொடியாக்கிவிட்டார். முழுக்க முழுக்க தமன்னாவுக்காக அந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருந்தது.

ரசிகர்கள் உச்சக்கட்டகோபம்: தலைவரின் பாடலில் மற்றொருவர் ஸ்கோர் செய்துவிட்டாரே என்ற ஆதங்கம் ரஜினி ரசிகர்களிடம் இருந்தது. மேலும், எதற்காக தமன்னாவுக்கான பாடலில் ரஜினிகாந்த்தை உள்ளே கொண்டு வர வேண்டும். ஏதோ சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட் போல் இந்தப் பாட்டில் ரஜினியை நெல்சன் உபயோகப்படுத்திவிட்டார் என காட்டமாகவே விமர்சனத்தை முன்வைத்தனர்.

மூன்றாவது சிங்கிள்: சூழல் இப்படி இருக்க படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதனையடுத்து மூன்றாவது சிங்கிளான ஜுஜுபி நேற்று வெளியானது. இரண்டாவது பாடல் வரிகள் போலவே மூன்றாவது பாடலின் வரிகளும் ரசிகர்களிடம் கவனத்தை பெற்றுள்ளன. இந்தப் பாடலையும் ஹுக்கும் பாடலை எழுதிய சூப்பர் சுப்புவே எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jailer Director has a request to Rajinikanth

மலையாள ஜெயிலர்:இந்தச் சூழலில் ஜெயிலர் படத்துக்கு புதிய சிக்கல் எழுந்திருக்கிறது. அதாவது மலையாளத்திலும் ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படம் ரிலீஸாகவிருக்கிறது. அதனை சக்கீர் மடத்தில் என்பவர் இயக்க என்.கே.மொகம்மது தயாரித்திருக்கிறார். மலையாள ஜெயிலரும் தமிழ் ஜெயிலர் ரிலீஸாகும் சமயத்தில் கேரளாவில் ரிலீஸாகவிருக்கிறது.

இயக்குநர் பேட்டி: இதனையடுத்து தமிழ் ஜெயிலர் பெயரை மாற்ற வேண்டும் என சக்கீர் மடத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் சக்கீர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "ஜெயிலர் படத்தால் நான் கடனாளி ஆகிவிட்டேன். எனது வீடு, நகை, கார் என அனைத்தையும் விற்றுதான் ஜெயிலர் திரைப்படத்தை எடுத்திருக்கிறேன். இதனை நம்பித்தான் எனது வாழ்க்கை இருக்கிறது. எனவே ரஜினி நல்ல மனிதர் என்பதால் இதை புரிந்துகொள்வார் என நம்புகிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X