Nelson Birthday: ஜெயிலர் இயக்குநருக்கு பிறந்தநாள்.. மனைவி மோனிஷா நெல்சன் போட்ட சூப்பர் போஸ்ட்!

சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சூப்பரான போஸ்ட் போட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி உள்ளார் அவரது மனைவி மோனிஷா நெல்சன்.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை இயக்கி உள்ள நெல்சன் அதன் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் பிசியாக உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட், ஜெயிலர் என அடுத்தடுத்து படங்களை இயக்கி வரும் நெல்சனுக்கு ஸ்பெஷலாக மாஷ் அப் எல்லாம் போட்டு தயாரிப்பு நிறுவனம் இயக்குநரை வாழ்த்தி உள்ளது.

Jailer Director Nelson celebrated his birthday today, his wife Monisha Nelson posts grabs hearts

லேடி சூப்பர்ஸ்டார் டு சூப்பர்ஸ்டார்: விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை இயக்கி வந்த இயக்குநர் நெல்சன் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்க நினைத்தார். ஆனால், அந்த படம் அப்படியே டிராப் ஆனது. அதன் பின்னர் நயன்தாரா நடிப்பில் டார்க் காமெடி படமாக உருவான கோலமாவு கோகிலா படத்தில் தான் இயக்குநராக அறிமுகமானார் நெல்சன் திலீப்குமார்.

லேடி சூப்பர்ஸ்டார் படத்தில் தொடங்கிய பயணம் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையே ஜெயிலர் படத்தில் இயக்கும் அளவுக்கு அவரது வளர்ச்சி சில ஆண்டுகளிலேயே கடின உழைப்பு காரணமாக பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

நெல்சனுக்கு பிறந்தநாள்: இயக்குநர் நெல்சன் 1984ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி வேலூரில் பிறந்தார். இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Jailer Director Nelson celebrated his birthday today, his wife Monisha Nelson posts grabs hearts

இயக்குநர் நெல்சன் இயக்கிய படங்கள் எல்லாமே முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் என்பது கூடுதல் சிறப்பு. நயன்தாராவின் கோலமாவு கோகிலா படம் பாராட்டுக்களை பெற்ற நிலையில், சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படம் செய்து பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்தினார்.

ஆனால், விமர்சன ரீதியாக அந்த படம் மிகப்பெரிய சொதப்பல் அடைந்த நிலையிலும், இயக்குநரை மாற்றாமல் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்துக்கும் நெல்சனையே கன்ஃபார்ம் செய்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் முத்துவேல் பாண்டியன் ஆட்டம் அரங்கம் அதிரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனைவியின் சூப்பர் போஸ்ட்: கணவர் நெல்சன் மற்றும் மகன் ஆத்விக் உடன் எடுத்த க்யூட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட மோனிஷா நெல்சன், "Happy birthday Nelson,Have a fantastic year ahead" என சூப்பரான வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

Jailer Director Nelson celebrated his birthday today, his wife Monisha Nelson posts grabs hearts

ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு பிறகு அடுத்ததாக யார் படத்தை இயக்கப் போகிறார் நெல்சன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. படத்தின் ரிலீசுக்கு முன்னாடியே நெல்சனுக்கு அடுத்தடுத்த படங்கள் புக் ஆகி வந்த நிலையில், ஜெயிலர் படத்தின் ரிலீஸை பார்த்து விட்டே மற்ற ஹீரோக்கள் நெல்சன் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளனரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

விஜய் பிறந்தநாள்: நாளை நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், பீஸ்ட் படத்தின் ரிலீஸுக்கு முன்னாடி விஜய் ரசிகர்கள் நெல்சன் பிறந்தநாளை வேறலெவலில் கொண்டாடியதை போலவே தற்போதும் சோஷியல் மீடியாவில் பீஸ்ட் படத்தின் தரமான காட்சிகளை பதிவிட்டு விஜய் ரசிகர்கள் நெல்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X