500 கோடி கிளப்பில் இணைந்த ஜெயிலர்.. அதிரடியாக சம்பளத்தை உயர்த்திட்டாரா நெல்சன்.. பரபரக்கும் கோலிவுட்

சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களை இயக்கி வந்த நெல்சன் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஒரே ஃபார்முலாவில் சென்றால் வண்டி ஓடாது என்பதை புரிந்துக் கொண்டு டார்க் காமெடி படங்களை இயக்கி ஹிட் கொடுத்து வருகிறார். கோலமாவு கோகிலா வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்தது.

Jailer Director Nelson plans to hike his salary to 50 Crores buzz trending

அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் சுமாரான ரிப்போர்ட் வந்தாலும் 200 கோடி கிளப்பில் இணைந்து நெல்சனுக்கு ரஜினிகாந்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கச் செய்தது.

ரஜினிக்கு 200 கோடி: ஜெயிலர் படத்துக்கு நடிகர் ரஜினிகாந்துக்கு 80 கோடி மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், 525 கோடிக்கு மேல் வசூலை அந்த படம் வாரி குவித்துள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் ரஜினிக்கு தனி ஷேரே கொடுத்திருப்பதாக கூறுகின்றனர். மேலும், அடுத்த படத்துக்கு ரஜினிகாந்த் 200 கோடி வரை சம்பளத்தை உயர்த்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Jailer Director Nelson plans to hike his salary to 50 Crores buzz trending

500 கோடி கிளப் இயக்குநர்: டாக்டர் 100 கோடி, பீஸ்ட் 200 கோடி மற்றும் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 500 கோடி கிளப்பில் இணைந்துள்ள நிலையில், தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் இயக்குநராகவே நெல்சன் மாறியுள்ளார். இயக்குநர் அட்லீக்கு கிடைப்பது போல 50 கோடி சம்பளத்தை அடுத்ததாக நெல்சன் டார்கெட் பண்ணப் போவதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு தகவல் ஒன்று காட்டுத்தீ போல பரவி வருகிறது.

பீஸ்ட் படம் பெரிய வெற்றி பெறாத நிலையில், ஜெயிலர் படத்துக்கு சன் பிக்சர்ஸ் நெல்சனுக்கு வெறும் 10 கோடி தான் சம்பளம் கொடுத்ததாக கூறுகின்றனர். சுமார் 30 கோடியாக கண்டிப்பாக அவரது சம்பளம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்கிற முடிவுடன் 50 கோடி வரை உயர்த்தப் போவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.

Jailer Director Nelson plans to hike his salary to 50 Crores buzz trending

அடுத்து யார் படம்: ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குநர் நெல்சன் சிறிது காலம் ஓய்வெடுத்து விட்டு ஒரு புதிய ஸ்க்ரிப்ட் உடன் டாப் ஹீரோ ஒருவரை இயக்கப் போவதாக கூறுகின்றனர். சிம்பு, சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், விஜய் என அனைவரும் படு பிசியாக உள்ள நிலையில், புதிய கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X