ஏய் டோப்பா மண்டை.. மாகாளி சுனிலை மரண கலாய் கலாய்த்த நெல்சன்.. ரெடின் கிங்ஸ்லி அலப்பறை ஜாஸ்தி!

சென்னை: ஜெயிலர் படத்தின் வெற்றியால் மீண்டும் மீடியா முன்னாடி செம ஜாலியான தனது முகத்தைக் காட்டி பேட்டி கொடுக்க ஆரம்பித்துள்ளார் இயக்குநர் நெல்சன். சமீபத்தில், ஃபிலிம் கம்பேனியன் யூடியூப் சேனலுக்கு செம ஜாலியாக அவர் அளித்த பேட்டியின் காட்சிகள் டிரெண்டாகி வருகின்றன.

நடிகர் வைபவின் அண்ணன் சுனில் டாக்டர் படத்தில் மாகாளியாக நெல்சன் கூட்டணியில் இணைந்த நிலையில், பீஸ்ட் படத்திலும் அதே கேரக்டரில் நெல்சன் யூனிவர்ஸ் போல வந்து சென்றார்.

Jailer Director Nelson trolls Sunil with Wig comment in an interview

ஜெயிலர் படத்தில் தமன்னாவின் காதலராகவே நடித்து கலக்கிய சுனிலை சமீபத்தில் பேட்டி ஒன்றில் "டோப்பா மண்டை" என பங்கமாக நெல்சன் கலாய்த்துப் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ஒரே பேட்டி தான் போங்க: விஜய்யை வைத்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கிய நிலையில், இயக்குநர் நெல்சன் சோஷியல் மீடியா மற்றும் மீடியாவில் இருந்தே அப்ஸ்காண்ட் ஆகிவிட்டார்.

எப்படியாவது ஜெயிலர் படத்தை ஹிட் ஆக்கி விட்டுத் தான் மீடியா முன் பேச வேண்டும் என நினைத்த நெல்சனுக்கு ஜெயிலர் படம் 400 கோடி வசூலை நெருங்கியுள்ள நிலையில், சந்தோஷத்தில் தொடர்ந்து மீடியாக்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

படுத்துக் கொண்டு ரெடின் கிங்ஸ்லி அலப்பறை: நாம எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கோம், அங்க பார்த்தீங்களா என செட்டிற்கு அருகே ரெடின் கிங்ஸ்லி சோபாவில் படுத்துக் கொண்டு அலப்பறை செய்ததை அப்படியே கேமராவை திருப்பிக் காட்டி பங்கமாக கலாய்த்து விட்டார் நெல்சன்.

எப்போதுமே தனது காமெடி டீமுடன் நேரத்தை அதிகமாக செலவிட்டு வரும் நெல்சன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற போது கூட ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரை அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

டோப்பா மண்டை: ஜெயிலர் படத்திலேயே தெலுங்கு நடிகர் சுனிலையும், மாகாளி சுனிலையும் டோப்பா மண்டை என கிண்டலடித்து காட்சி வைத்திருந்த நெல்சன், இந்த பேட்டியிலும் திடீரென வெளியே கிளம்பிச் சென்ற சுனிலை பார்த்து டோப்பா மண்டை என அழைத்து மரண கலாய் கலாய்த்து விட்டார்.

நமக்கு மட்டும் தானே அவரை பத்தி தெரியும், இப்போ 4 ஸ்டேட்லையும் அவரை பத்தி தெரியும் என அந்த பேட்டியில் தனது நண்பர்களை ஓட்டியே ஓவர் ஸ்கோர் செய்து விட்டார் நெல்சன். ஆனால், இப்படி நெல்சன் கூட இருப்பவர்களையே பாடி ஷேமிங் செய்வது சரியல்ல என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X