நெல்சன் மனைவியும் காஷ்மீரில்.. ’லியோ’ விஜய்யை சந்திக்க வாய்ப்பு இருக்கா? டிரெண்டாகும் வீடியோ!
ஸ்ரீநகர்: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், ஜெயிலர் பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா நெல்சனும் காஷ்மீரில் தான் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார்.
இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அழகில் இருக்கும் இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா நெல்சன் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.
அடிக்கடி ஹாலிடேவை என்ஜாய் பண்ணி வரும் மோனிஷா நெல்சன் இந்த முறை காஷ்மீரில் தனது மகனுடன் விடுமுறையை கொண்டாடி வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கடும் பனி
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நடைபெற்று வரும் நிலையில், ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் இந்த முறை காஷ்மீருக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சனின் மனைவி குடும்பத்துடன் தற்போது காஷ்மீரில் சுற்றுலா செய்து வருகிறார்.

துபாய் டூர்
பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு பிறகு நெல்சன், மோனிஷா நெல்சன், கவின், பிரியங்கா மோகன், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்கள் துபாய்க்கு சுற்றுலா சென்று வந்தனர். அதன் வீடியோக்களும் புகைப்படங்களும் அதிகம் டிரெண்டாகின. இந்நிலையில், மோனிஷா நெல்சன் தற்போது தனது மகனுடன் காஷ்மீரில் ஜாலி டூர் அடித்து வருகிறார்.

பனியில் விளையாடும் வீடியோ
ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கி வரும் நிலையில், அவரது மனைவி மோனிஷா நெல்சன் தனது மகனுடன் காஷ்மீரில் பனியில் விளையாடும் வீடியோ ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். பனிக்கட்டிகளை அம்மா மீது தூவி மகன் செம ஹேப்பியாக தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

ஜெயிலர் ஷூட்டிங்கும்
நெல்சன் மனைவி மோனிஷா நெல்சன் காஷ்மீரில் விடுமுறையை கொண்டாடி வரும் நிலையில், ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கும் காஷ்மீரில் நடக்கிறதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு மங்களூருவில் நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லியோ ஷூட்டிங்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த பனி காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தனது லியோ படத்தின் ஷூட்டிங்கையே காஷ்மீரில் நடத்தி வருகிறார். நடிகர் விஜய், த்ரிஷா என லியோ படத்தில் நடித்து வரும் பிரபலங்கள் காஷ்மீரில் எடுத்துக் கொள்ளும் போட்டோக்களும் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றன.

விஜய்யை சந்திப்பாரா மோனிஷா
காஷ்மீரில் விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷா நடிகர் விஜய்யை சந்திக்க வாய்ப்பு இருக்கா என ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் போட்டு வருகின்றனர். டிடி நீலகண்டன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் மோனிஷா நெல்சனின் க்யூட் வீடியோவை பார்த்து லைக் மற்றும் கமெண்ட்டுகளை போட்டு ஜாலியா என்ஜாய் பண்ணுங்க என கூறி வருகின்றனர்.

ஜெயிலருக்காக வெயிட்டிங்
பீஸ்ட் படம் அதிகமான ட்ரோல்களை சந்தித்து சொதப்பிய நிலையில் கூட, நெல்சனுக்கு கொடுத்த வாக்கை ரஜினிகாந்த் கைவிடவில்லை. அதற்காகவே வெயிட்டான படத்தை கொடுக்க நினைத்து கடுமையாக உழைத்து வரும் நெல்சன் சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா மற்றும் ரம்யா கிருஷ்ணன் என மிகப்பெரிய ஸ்டார் காஸ்ட் உடன் ஜெயிலர் படத்தை உருவாக்கி வருகிறார். இந்த ஆண்டு தீபாவளிக்கு ஜெயிலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











