வெறித்தனமான கிளைமேக்ஸை தூக்கிய சென்சார்.. அது மட்டும் இருந்திருந்தா.. ஜெயிலர் எடிட்டர் புலம்பல்!
சென்னை: ஜெயிலர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரஜினிகாந்த், மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் மூவரும் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், தியேட்டரே அதிர்ந்து விட்டது. இந்நிலையில், அதை விட மரண மாஸான கிளைமேக்ஸ் ஒன்றை நெல்சன் வைத்திருந்தார் என எடிட்டர் நிர்மல் அளித்த பேட்டியில் ரிவீல் செய்து ரசிகர்களை வெறியேற்றி உள்ளார்.
ஹாலிவுட் படங்களை போல ஸ்லோவாக ஆரம்பிக்கும் ஜெயிலர் திரைப்படம் இடைவேளை காட்சிக்கு முன்பாக சூடு பிடித்து ஜெட் வேகத்தில் சென்று இரண்டாம் பாதியில் சுனில், தமன்னா போர்ஷனில் மீண்டும் ஸ்லோவாகி ப்ரீ கிளைமேக்ஸ் மற்றும் கிளைமேக்ஸில் உச்சம் தொட தியேட்டருக்கு சென்ற ரசிகர்களை ஒரு வழியாக திருப்திப்படுத்தி அனுப்பி உள்ளார் இயக்குநர் நெல்சன்.

ஜெயிலர் கிளைமேக்ஸ்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ஜெயிலர் படத்தில் எந்தவொரு பெரிய ஹீரோவாக இருந்தாலும் அழைத்து வாருங்கள் சம்பளத்தை பார்த்துக் கொள்ளலாம் என கலாநிதி மாறன் தாராளம் காட்டிய நிலையில், சூப்பர்ஸ்டாரின் நண்பர்களான மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் கேமியோ ரோலில் இணைந்து கலக்கினர்.
அதிலும் அந்த கிளைமேக்ஸ் காட்சியில் பல வருடங்கள் கழித்து மீண்டும் புகைப்பிடிக்கும் காட்சியில் ரஜினிகாந்த் நடிக்க அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார் என அனைவரும் புகைப்பிடிக்கும் மாஸான கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்களை தியேட்டரில் மிரட்டியது.

சென்சாரான கிளைமேக்ஸ்: அதை விட தெறி மாஸான ஒரு கிளைமேக்ஸ் காட்சி அதற்கு பிறகு வரும் என்றும் ஆனால், சென்சார் நிறுவனம் அதை கட் செஞ்சிட்டாங்க என ஜெயிலர் படத்தின் எடிட்டர் நிர்மல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூற ரஜினி ரசிகர்கள் அந்த டெலிடட் சீனையாவது போடுங்க பார்த்து ஃபயர் விடுறோம் என கெஞ்சி வருகின்றனர்.
சூப்பர்ஸ்டார், சிவாண்ணா மற்றும் லாலேட்டனை வைத்து ஜெயிலர் பார்ட் 2 படத்தை கட்டாயம் நெல்சன் இயக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











