Jailer: “என்னய்யா தமன்னாவ காணோம்..” ஜெயிலர் ட்ரெய்லர்... காவாலா வைப் மிஸ்ஸிங்: ரசிகர்கள் புலம்பல்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது.
ரஜினி - நெல்சன் - அனிருத் கூட்டணியில் வெளியான இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரஜினியின் கிளாஸிக் ஸ்டைல், மாஸ் பஞ்ச் டயலாக் என அனைத்துமே ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

இந்நிலையில், எல்லாம் இருந்தாலும் ஜெயிலர் ட்ரெய்லரில் தமன்னாவை காணோமே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
ஜெயிலர் ட்ரெய்லர்ல தமன்னாவ காணோம்
சூப்பர் ஸ்டார் - நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. சூப்பர் ஸ்டாருடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதும் முதலில் ஜெயிலர் டைட்டில், ரஜினி தீம் மியூசிக், ரஜினியின் கேரக்டர் அறிமுகம் ஆகியவை அடுத்தடுத்து வெளியானது. அதன் பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. வழக்கமாக ரஜினியின் இன்ட்ரோ சாங்காக வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, தமன்னாவை களமிறக்கி வைப்ரேஷன் கொடுத்தார் நெல்சன்.
அனிருத் இசையில் 'காவாலா' என்ற டைட்டிலில் வெளியான இந்தப் பாடலில் தமன்னாவின் ஆட்டம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது. கிளாமராக குத்தாட்டம் போட்டு இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரின் தூக்கத்தையும் கலைத்துவிட்ட தமன்னாவின் வைப், இன்ஸ்டா ரீல்ஸ்களில் அதிகம் பார்க்க முடிந்தது. ஒருகட்டத்தில் தமன்னாவுக்காகவே ஜெயிலர் படம் பார்க்கலாம் என ரஜினி ரசிகர்கள் கூறியது வைரலானது.
அதேபோல், ஜெயிலர் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் போதும், இனி தலைவரே வேண்டாம் இந்தப் பாடலிலும் தமன்னாவே ஆடினால் போதும் என ரசிகர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கிவிட்டனர். அந்தளவிற்கு ரஜினி ரசிகர்கள் தலைவரை மறந்துவிட்டு தமன்னாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் இப்போது ஜெயிலர் ட்ரெய்லர் செம்ம மாஸ்ஸாக வெளியானது.
ரஜினியின் ஆக்ஷன் ட்ரீட்டாக அமைந்துள்ள இந்த ட்ரெய்லரில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், ஜாக்கி ஷெராஃப், சுனில் ஆகியோரை மட்டுமே காட்டியுள்ளார் நெல்சன். தமன்னாவை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஒரு சீனில் கூட தமன்னாவை காட்டவில்லை என்பதால், காவாலா வைப் இல்லாமல் ஜெயிலர் ட்ரெய்லரை ரசிக்க முடியவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
இதனை கன்டெண்ட்டாக வைத்து டிவிட்டரில் மீம்ஸ்களை போட்டு நெல்சா இதெல்லாம் நியாயமா எனவும் நெட்டிசன்கள் பொங்கியுள்ளனர். தமன்னாவை ரசிப்பதற்காக ஜெயிலர் படத்திற்கு டிக்கெட் புக் செய்யவிருந்த ரசிகர்கள், தற்போது மன உளைச்சலில் இருப்பதை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











