Jailer: மெகா பிளாக்பஸ்டர்.. இந்த வாரமும் நான்ஸ்டாப் ரன்னிங்.. வசூல் மட்டும் இத்தனை கோடியா?
சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான நிலையில், 25வது நாள் கொண்டாட்டத்தையே சன் பிக்சர்ஸ் தற்போது கொண்டாடி உள்ளது.
மெகா பிளாக்பஸ்டர் என்றும் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த சினிமாவும் செய்யாத வசூல் சாதனையை ஜெயிலர் செய்திருப்பதாக ரெக்கார்டு மேக்கர் என்பதை குறிப்பிட்டு ரஜினிகாந்தின் ஃபிளாஷ்பேக் போர்ஷன் வீடியோவையும் வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். இந்த வார ஞாயிற்றுக்கிழமை வசூலுடன் சேர்த்து ஜெயிலர் திரைப்படம் 600 கோடி கிளப்பில் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

25 நாள் சரவெடி: ரிலீஸ் ஆன நாளிலிருந்து 72 வயதில் ரஜினிகாந்த் என்னம்மா ஆக்ஷன் செய்கிறார், காமெடி செய்கிறார், சென்டிமென்ட்டில் ரசிகர்களை கவர்கிறார் என்பதை காண உலகம் முழுவதும் உள்ள சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் படத்தை பார்க்க தியேட்டரை நோக்கி திரண்டு வந்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெற்றிகரமாக 25 நாட்களை கடந்து விட்டதாக சன் பிக்சர்ஸ் தற்போது புதிய மெர்சலான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.
சிவராஜ்குமார் முதல் மோகன்லால் வரை: சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன் என ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு முழு காரணமாக இருந்த அனைத்து நடிகர்களும் இடம்பெறும் லேட்டஸ்ட் ப்ரோமோ டிரெண்டாகி வருகிறது. இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா என ஆல் ஏரியா ரசிகர்களும் கொண்டாடியதன் விளைவு தான் இப்படியொரு வசூல் சாதனையை ஜெயிலர் படைக்க காரணமாக மாறியுள்ளது.

600 கோடி வசூல் தாண்டியாச்சு: ஜெயிலர் திரைப்படம் 525 கோடி வசூலை அதிகாரப்பூர்வமாக தாண்டியதாக சன் பிக்சர்ஸ் அறிவித்த நிலையில், இந்த வார இறுதியுடன் ஜெயிலர் திரைப்படம் 600 கோடி கிளப்பில் இணைந்து விட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நாளை அல்லது நாளை மறுநாள் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக 600 கோடி வசூலை ஜெயிலர் கடந்ததை அறிவிக்கும் எனக் கூறுகின்றனர்.
அமேசான் ஓடிடியில்: ஒரே மாதத்தில் ஜெயிலர் தியேட்டரில் ஒட்டுமொத்த வசூலையும் வாரி சுருட்டிய நிலையில், உலகம் முழுவதும் உள்ள ஓடிடி ரசிகர்களை குஷிப்படுத்த வரும் செப்டம்பர் 7ம் தேதியே ஜெயிலர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகப் போவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











