Jailer Box Office: இதுவரை இத்தனை கோடிக்கு டிக்கெட் புக்கிங்கா.. ஜெயிக்கப் போகும் ஜெயிலர்!

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதியான நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில வெளிநாடுகளில் இன்று நள்ளிரவே ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், திரையிட்ட அனைத்து இடங்களிலும் ஜெயிலர் படத்தின் முதல் நாள் டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்றுத் தீர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Jailer First Day Box Office at Tamil Nadu reports are trending now with pre booking numbers

தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக 4,124 காட்சிகள் ஒட்டுமொத்தமாக ஜெயிலர் படத்துக்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் நாள் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1.4 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை: தமிழ்நாட்டில் மட்டும் ஜெயிலர் படத்துக்கு ஒட்டுமொத்தமாக முதல் நாளில் 4,124 காட்சிகள் திரையிடப்படும் நிலையில், இதுவரை ஒட்டுமொத்தமாக 14 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், புக் மை ஷோவில் இந்தியளவில் இதுவரை இல்லாத அளவுக்கு டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு வருவதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன.

Jailer First Day Box Office at Tamil Nadu reports are trending now with pre booking numbers

சென்னை முதல் ஜப்பான் வரை திரையிட்ட அனைத்து ஏரியாவிலும் அய்யா கில்லி என்பது போல ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே 4 நாட்களுக்கு அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

28 கோடி வசூல்: இதுவரை கணக்கிடப்பட்ட டிக்கெட்டுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக முதல் நாளே ஜெயிலர் படம் தமிழ்நாட்டில் 28 கோடி முதல் 30 கோடி வரை வசூலை வாரி குவிக்கும் என தெரிகிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட இடங்களிலும் ஜெயிலர் படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் உள்ளனர்.

Jailer First Day Box Office at Tamil Nadu reports are trending now with pre booking numbers

போலா சங்கர் தான் போட்டியே: ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கு கோலிவுட்டில் எந்தவொரு பெரிய படங்களும் போட்டிக்கு வராத நிலையில், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த போலா சங்கர் மட்டுமே போட்டிக்கு வருகிறது. அந்த படத்திலும் தமன்னா தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

Jailer First Day Box Office at Tamil Nadu reports are trending now with pre booking numbers

ஆன போதும், டிக்கெட் விற்பனையில் ஜெயிலரை விட போலா சங்கர் சற்று பின் தங்கியே இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தர்பார், அண்ணாத்த படங்கள் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாகவும் சொதப்பிய நிலையில், ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டப் போவது கன்ஃபார்ம். படமும் நன்றாக வந்து விட்டால், மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக ஜெயிலர் அமையும் என ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X