Kaavaala: தலைவா தள்ளுங்க தமன்னா தெரியல.. ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் காவாலா ரிலீஸ்.. குவியும் ட்ரோல்!

சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாடல் நேற்று வெளியாகி ஒரு பக்கம் செம வைபாக போய்க் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் ஷகீரா முதல் கிருபை கிருபை பாடல் காப்பி என ட்ரோல்களும், செந்தில் முதல் ஆர்யாவின் தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என பல பாடல்களுக்கும் இந்த காவாலா எடிட்டை போட்டு ரசிகர்கள் ரண கொடூரம் செய்து வருகின்றனர்.

Jailer first single Kaavaala trolls and vibes trending in social media

நடிகர் ரஜினிகாந்த் அந்த பாடலிலேயே கேமியோவாகத்தான் வரப் போகிறார் என்றும் ஏகப்பட்ட மீம்களையும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பதிவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

தமன்னா தாறுமாறு: ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என அடுத்தடுத்து ஓடிடி தளங்களில் வெளியான படைப்புகளில் ஆபாசத்தின் உச்சிக்கே சென்று நடித்திருந்தார் நடிகை தமன்னா. இந்நிலையில், ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் என்ன செய்யப் போகிறார் நெல்சன் என பார்த்தால், டிரெண்டிங்கை பிடித்து மூடு ஏற்றும் பாடலையே போடுங்க அனிருத் என ஃப்ரீடம் கொடுக்க, தமன்னாவுக்கு தாறுமாறான பாடலை அனிருத் போட்டு ரசிகர்களை வைப் ஆக்கி உள்ளார்.

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாட்டுக்கு தமன்னா தாறுமாறு டான்ஸ் போட்டுள்ள நிலையில், அவரது போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

தலைவர் வித் தமன்னா: இன்னைக்கு தர்ஸ்டே இல்லடா தலைவர் வித் தமன்னா டே என காவாலா பாடலை ரசிகர்கள் ஒரு பக்கம் டிரெண்ட் செய்தும் ட்ரோல் செய்தும் ஏகப்பட்ட ட்வீட்களை ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

என்னடி இது: காவாலா ப்ரமோ, காவாலா ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி இருக்குன்னு ரஜினிகாந்தின் எந்திரன் படத்தின் டெம்பிளேட் மீம்ஸை போட்டே நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

செந்தில் டான்ஸ்: காமெடி நடிகர் செந்தில் காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது போன்ற எடிட் தான் சோஷியல் மீடியா முழுக்க டிரெண்டாகி வருகிறது. மேலும், ஆர்யாவின் தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா, ரஜினிகாந்தின் தீ பட பாடல்கள் என அனைத்தையும் காவாலா பாடலை மிக்ஸ் செய்து ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அதே நேரம் ரஜினிகாந்த் மற்றும் தமன்னாவை வைத்து ஏகப்பட்ட மோசமான ட்ரோல்களை விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வர, இரு தரப்புக்கும் சோஷியல் மீடியா சண்டையும் வெடித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X