Kaavaalaa - இது அதுல்ல.. காவாலா பாடல் எம்ஜிஆர் பட இசையின் காப்பியா?.. ஆரம்பித்தது சர்ச்சை

சென்னை: Kaavaalaa (காவாலா) ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாடல் எம்ஜிஆர் பட இசையின் காப்பி என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்த தர்பார் படத்தையும், சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்தையும் ரஜினிகாந்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் இரண்டு படங்களும் அவரை ஏமாற்றிவிட்டன. சிவா மூலம் அஜித்துக்கு கிடைத்த மாஸ் ஹிட் ரஜினிக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்துதான்நெல்சனுடன் கை கோர்த்தார் ரஜினிகாந்த்.

Jailer First Single Kaavaalaa Song Copy From MGR Movie Music

நிரூபிப்பாரா நெல்சன்: கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் மூன்றாவது படமாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். முதல் இரண்டு படங்கள் போலவே அந்தப் படமும் ஹிட் ஆகும் என எதிர்பார்த்திருந்த நெல்சனுக்கு பலத்த அடி விழுந்தது. குறிப்பாக சமூக வலைதளங்களில் பலரும் நெல்சன் திலீப்குமாரை ட்ரோல் மெட்டீரியலாக மாற்றினர். இப்படிப்பட்ட சூழலில்தான் ரஜினியை இயக்க ஒப்பந்தமானார் நெல்சன். எனவே விஜய்யிடம் விட்டதை ரஜினியை வைத்து பிடித்து மீண்டும் தன்னை நிரூபிக்க காத்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.

ரஜினி கொடுத்த ஐடியா: பீஸ்ட் படத்தின் தோல்வியால் ரஜினிகாந்த் நெல்சன் மீது நம்பிக்கை இழந்துவிட்டார் எனவும், ஒருகட்டத்தில் அவரை படத்திலிருந்து தூக்குவதற்கு தயாராகிவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், ஒருவழியாக ஜெயிலர் படத்துக்கு நெல்சனே இயக்குநராக இறுதி செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக்குவதும், அதற்காக பல மொழிகளில் இருந்தும் ஸ்டார்களை களம் இறக்குவதும் என ரஜினிகாந்த் ஐடியா கொடுத்ததாக கூறப்படுகிறது.. அதன்படிதான், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் என நட்சத்திர பட்டாளம் களமிறக்கப்பட்டதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

காவாலா சிங்கிள்: படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலானது. திரைப்படமானது ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் படத்தின் முதல் சிங்கிளான காவாலா சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. பாடல் செம வைப் கொடுப்பதாக அனிருத் ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.

Jailer First Single Kaavaalaa Song Copy From MGR Movie Music

ட்ரோல்கள்: அதேசமயம் பாடலை பலர் ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர். பாடலை தமன்னாவுக்காக மட்டும்தான் பார்க்கலாம். ரஜினி இந்தப் பாடலில் தேவையில்லாத ஆணியாக தோன்றுகிறார் என வெளிப்படையாகவே விமர்சனம் செய்தனர். இதனையடுத்து ரஜினி ரசிகர்களோ படத்தில் பாருங்கள் எங்கள் தலைவரை என்று கூறிவருகின்றனர்.

பாடல் காப்பியா?: இந்நிலையில் பாடல் குறித்த புதிய சர்ச்சை ஒன்று எழுந்திருக்கிறது. அதன்படி இந்தப் பாடலை அனிருத் காப்பி அடித்திருக்கிறார் என கூறுகின்றனர் ரசிகரக்ள். அதாவது எம்ஜிஆர் நடித்த ஒரு படத்தின் காட்சியில் வரும் பின்னணி இசையும், காவாலா பாடலில் வரும் ஆரம்ப இசையும் ஒரே மாதிரி இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை பகிர்ந்துவருகின்றனர் ரசிகர்கள். இதனை பார்த்த பலர் அட ஆமா அதுபோலவேத்தான் இருக்கு என கூறி வீடியோவை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X