ஜெயிலர் டிக்கெட் பிரஷர்.. லியோ மெண்டல் பிரஷர்.. விடாமல் வச்சு செய்யும் மனோபாலா விஜயபாலன்!

சென்னை: ஜெயிலர் vs லியோ பிரச்சனை சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பற்றிக் கொண்டு எரிகிறது. ஜெயிலர் வசூலை லியோ முந்தி விட்டது என ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் கெத்துக் காட்ட, தியேட்டர் எல்லாம் காத்து வாங்குது என ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்களை இதுவரை அஜித் ரசிகர்களே போட்டு பொளக்காத அளவுக்கு பொளந்து கட்டி வருகின்றனர்.

Jailer gives Ticket pressure for theatres and Leo gives Mental pressure for theatres - Manobala

லியோ திரைப்படம் 461 கோடி ரூபாயை அதிகாரப்பூர்வமாக வசூல் ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையிலும், அதெல்லாம் ஃபேக் பாக்ஸ் ஆபிஸ் அறிவிப்பு என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளரே விஜய் தான் லலித் அவரோட பினாமி என தொடர்ந்து வன்மத்தை கக்கி வரும் மனோபாலா லியோ இதுவரை வெறும் 300 கோடி வசூல் தான் ஈட்டியுள்ளது என்றும் டிசாஸ்டர் என்றும் தொடர்ந்து லியோ டிசாஸ்டர் ட்வீட்களை போட்டு வருகிறார்.

லியோ ஜெயிலர் வசூலை முறியடித்து விட்டதாக கூறப்படும் நிலையில், 2.0 படத்தை முறியடிக்கவில்லை என ரஜினிகாந்த் ரசிகர்கள் அந்த பக்கம் சென்றாலும் லியோ மற்றும் ஜெயிலர் மோதலை விடாமல் மனோபாலா பிடித்துக் கொண்டிருக்கிறார்.

ரசிக்கும் நடிகர்கள்: பாக்ஸ் ஆபிஸ் மோதல் தற்போது விஜய் மற்றும் அஜித் என்கிற நிலைமை மாறி விஜய் மற்றும் ரஜினி என்கிற நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், இரு தரப்பு ரசிகர்களையும் இன்ஃப்ளூயன்ஸர்கள் தூண்டி விட்டு சண்டையை மூட்டி வரும் நிலையில், யாரையும் தடுக்காமல் நடிகர்கள் ரசித்துக் கொண்டு சந்தோஷமாக இந்த சண்டையை வேடிக்கை பார்த்து வருவதாக கூறுகின்றனர்.

Jailer gives Ticket pressure for theatres and Leo gives Mental pressure for theatres - Manobala

லியோ மெண்டல் பிரஷர்: தொடர்ந்து லியோ படம் படு தோல்வி என்றும் வசூலே வரவில்லை என சொல்லி வரும் மனோபாலா கொஞ்சம் கொஞ்சமாக 300 கோடி வசூல் வரை வந்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் போட்டுள்ள ட்வீட்டில் ஜெயிலர் படம் வெளியான போது தியேட்டர்களுக்கு டிக்கெட் பிரஷர் இருந்தது என்றும் லியோ படம் வெளியாகி உள்ள நிலையில், தியேட்டர்களுக்கு மெண்டல் பிரஷர் தான் ஏற்பட்டுள்ளது என பதிவிட்டு மீண்டும் தனது வெறுப்புணர்வை நடிகர் விஜய்க்கு எதிராக கொட்டித் தீர்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X