Rajini love story: ஜெயிலர் படக்கதை தெரியும்... ரஜினி காதலில் விழுந்த கதை தெரியுமா?
சென்னை: சோஷியல் மீடியா,ஊடகம்,பத்திரிக்கை என எந்தப்பக்கம் திரும்பினாலும் ஜெயிலர் திரைப்படம் பற்றிய பேச்சுத்தான்.
இந்த மாதம் 10ந் தேதி தான் ஜெயிலர் திரைப்படம் வெளியானது என்றால், கடந்த மாதமே ஜெயிலர் பீவர் ஆரம்பித்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் இசைவெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசி ஹைப்பை எகிற வைத்துவிட்டார்.

இதனால், ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு அனைத்தையும் ஆக்ஷனில் அடித்து தூக்கிவிட்டார் ரஜினி.
ஜெயிலர்: ஜெயிலர் படத்தை அவரது ரசிகர்கள் ரிப்பீட் மோடில் மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர். இன்றைய 2கே கிட்ஸ்களும் படத்தைப் பார்த்து திரையரங்கில் ஆட்டம் போட்டு வருகின்றனர். நான்கு தலைமுறைகளை கடந்து சூப்பர் ஸ்டாராக மாஸ் கட்டி வரும் ரஜினிகாந்தின் காதல் கதையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ரஜினியின் பயணம்: பேருந்து நடத்துனராக இருந்த ரஜினி, நண்பர் கொடுத்த உத்வேகத்துடன் வெறும் 150 ரூபாயுடன் சென்னை பயணத்தை தொடங்கினார். அப்போது, கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வராகம் படத்தில் ரஜினிகாந்த் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பின், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, காயத்ரி, புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை போன்ற படங்கள் அவரை மாசான ஸ்டைல் ஹீரோவாக ஆக்கியது.

2 மணிநேரம் பேட்டி: ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு நிற்கக்கூட நேரமில்லாமல் இருந்த ரஜினியை பேட்டி எடுக்க வந்தவர் தான் லதா. எத்திரிராஜ் கல்லூரி பிஏ ஆங்கில இலக்கணம் படித்து வந்த இவர், தனது கல்லூரி சிறப்பு நாளிதழுக்காக ரஜினிகாந்தை பேட்டி எடுத்தார். 20 நிமிடம் அப்பாயின்ட்மென்ட் பெற்ற லதா, அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேட்டி எடுத்துள்ளார்.
திருப்பதியில் திருமணம்: பேட்டி முடிந்து லதா புறப்படும் முன், ரஜினி உங்களை திருமணம் செய்து கொள்ள நினைப்பதாக கூறினார். நேருக்கு நேராக திருமணம் செய்து கொள்ளலாமா என ரஜினி கேட்ட விதம் லதாவிற்கு பிடித்து இருந்ததால், குடும்பத்தினரிடம் பேசும்படி கூறினார். இதன் பிறகு பெற்றோரின் சம்மதத்துடன் 1981 ஆம் ஆண்டு ரஜினிக்கும் லதாவுக்கு திருப்பதியில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.
அன்பால் மாற்றினார்: அன்று தொடங்கிய அந்த காதல் கதை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து பார்ப்பவர்கள் கண்படும் அளவுக்கு வாழ்ந்து வருகின்றனர். மது, சிகரெட், அசைவம் என இருந்த என்னை அன்பால் மாற்றியர் என் மனைவி என்றும், 73 வயதிலும் நான் ஆரோக்கியத்தோடு இருப்பதற்கு காரணம் என் மனைவி லதா தான் காரணம் என்று ரஜினிகாந்த் பல நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
கருத்து வேறுபாடு, மனக்கசப்பு, எதற்கு எடுத்தாலும் சண்டை, விவாகரத்து என்று அவசரப்படும் இந்த தலைமுறையினருக்கு இவர்கள் இருவரும் ஒரு எடுத்துக்காட்டாகவே வாழ்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











