Tamanna: ஆடை குறைப்பில் தள்ளுபடி வழங்கும் தமன்னா... சொல்ல முடியாமல் தவிக்கும் ரசிகாஸ்!
சென்னை: காவாலா பாடல் மூலம் ரசிகர்களை வளைத்துப்போட்ட தமன்னா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா, 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் படங்களை தவிர்த்து விட்டு மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகை தமன்னா: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற காவாலா பாடலுக்கு கலக்கலாக டான்ஸ் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்பு இல்லாமல் பாலிவுட் பக்கம் சென்ற தமன்னாவின் காவாலா பாடல் மூலம் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகி விட்டார்.

நச் பதில்: சினிமாவுக்கு வந்த புதிதில் அடக்கமாகவும் கவர்ச்சி காட்டாமல் இருந்த தமன்னா, தற்போது அதீத கவர்ச்சி, படுக்கை அறைகாட்சி என ஓவர் கவர்ச்கி காட்டி வருகிறார். பட வாய்ப்புகளை பிடிக்கும் முயற்சி என இணையத்தில் இதுகுறித்து விவாதமே நடந்த நிலையில், இதற்கு பதில் அளித்த தமன்னா, நான் அணியும் உடைகள் கவர்ச்சியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். கதைக்கும் கதாபாத்திரத்தின் தேவைக்கும் ஏற்பவே உடைகளை தேர்வு செய்து நடிக்கிறேன் என்றார்.
கைவசம் உள்ள படம்: தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகயிருக்கிறது. மேலும் ஹிந்தியில் வேதா என்ற படத்திலும் நடித்து வருகிறார். திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராமில் பல முன்னணி பிராண்ட்களை ப்ரமோட் செய்து வருகிறார்.

குவியும் லைக்குகள்: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தமன்னா தற்போது தனது தங்கநிற உடையில் தனது இடையை தெறியவிட்டு அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகாஸ் உச்சு கொட்டி அவரின் அழகில் மயங்கி வருகின்றனர். இந்த போட்டோவிற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











