Rajini Kamal: கமல் போட்டுக் கொடுத்த ரூட்டு... ஜெயிலரில் சக்சஸ் பண்ண ரஜினி... விக்ரம் ஃபார்முலா தான்

சென்னை: ரஜினி - நெல்சன் கூட்டணி முதன்முறையாக இணைந்த ஜெயிலர் படம் கடந்த வாரம் வெளியானது.

அண்ணாத்த தோல்வியால் சரியான கம்பேக் கொடுக்க காத்திருந்த ரஜினிக்கு ஜெயிலர் கைகொடுத்துள்ளது.

 Jailer: Kamal is the reason for the success of Rajinis Jailer

பீஸ்ட் தோல்வியால் நெல்சனுடன் இணைவது குறித்து ரஜினிக்கு தயக்கம் இருந்ததாக அப்போது செய்திகள் வெளியாகின.

ஆனால், ரஜினிக்கு நம்பிக்கை கொடுத்து ஜெயிலரில் நடிக்க வைத்தது கமல் தான் என சொல்லப்படுகிறது.

ரஜினிக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த கமல்: கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனுக்கு வெறித்தனமான கம்பேக் கொடுத்தது. அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினி ஜெயிலர் படத்தில் மாஸாக கம்பேக் கொடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி, நெல்சன், சன் பிக்சர்ஸ், அனிருத் என மெகா கூட்டணியில் உருவான இந்தப் படம் கடந்த வாரம் 10ம் தேதி சிங்கிளாக களமிறங்கியது.

வழக்கமாக ரஜினி படத்திற்கு இருக்கும் ஓபனிங் ஜெயிலருக்கும் கிடைத்துள்ளது. அதன்படி முதல் வாரம் மட்டுமே உலகம் முழுவதும் 375 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தொடர்ச்சியாக மக்களிடம் வரவேற்பு இருப்பதால் பாக்ஸ் ஆபிஸில் இன்னும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தில் நடிக்க ரஜினி தயங்கியதாகவும், கமல் தான் அவருக்கு ஐடியா கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதாவது, சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின்னர் தான் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நெல்சன் கமிட்டானார். விஜய் - நெல்சன் காம்போவில் வெளியான பீஸ்ட் நெகட்டிவான விமர்சனங்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. விஜய்யின் மிக மோசமான தோல்விப் படம் பீஸ்ட் என விமர்சனங்கள் எழுந்தன.

அப்போது தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169 படத்தை இயக்க கமிட்டாகியிருந்தார் நெல்சன். பீஸ்ட் தோல்வியால் தலைவர் 169 படத்தில் இருந்து நெல்சன் நீக்கப்படலாம் என அப்போது செய்திகள் வெளியாகின. மேலும், நெல்சனுக்குப் பதிலாக வேறொரு இயக்குநர் தலைவர் 169ல் இணையலாம் என சொல்லப்பட்டது. ஏற்கனவே பேட்ட, தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்வியால் விரக்தியில் இருந்தார் ரஜினி.

இதனால், நெல்சனுடன் இணைவது குறித்து தனது நெருங்கிய நண்பரான கமலுடன் ரஜினி ஆலோசனை செய்ததாக சொல்லப்படுகிறது. அப்போது கமல் தான் ரஜினியிடம் பேசி ஜெயிலரில் நடிக்க வைத்தாராம். கைதி வெற்றிக்குப் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. ஆனால், விக்ரம் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது.

அதேபோல், பீஸ்ட் தோல்வியை நினைத்து பயப்படாமல், நெல்சனை நம்பி ஜெயிலரில் நடிக்கலாம் என்றுள்ளார். அதுமட்டும் இல்லாமல் கதையில் எதும் கரெக்‌ஷன் சொல்லாமல் நெல்சன் விருப்பத்துக்கு படம் எடுக்க அனுமதி கொடுங்கள் எனவும் ரஜினிக்கு கமல் அட்வைஸ் செய்துள்ளார். தனது விக்ரம் வெற்றிக்கான காரணம் இதுதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்பிறகே ஜெயிலர் படத்தில் துணிந்து நடித்துள்ளார் ரஜினி. ஆனாலும், இதுகுறித்து உண்மையான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X