Jailer: "படம் பார்த்ததுக்கே சொகுசு கார் பரிசு தரணும்": ஜெயிலரை சைலண்டாக கலாய்த்த கார்த்தி சிதம்பரம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர், கடந்த மாதம் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
இதனையடுத்து, ரஜினி, நெல்சன், அனிருத் மூவருக்கும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சொகுசு கார் பரிசளித்தார். இந்நிலையில், எம்பி கார்த்தி சிதம்பரம் ஜெயிலர் படத்தை சைலண்டாக கலாய்த்து ட்வீட் போட்டது வைரலாகி வருகிறது.

ஜெயிலரை சைலண்டாக கலாய்த்த கார்த்தி சிதம்பரம்:சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169வது படமாக உருவானது ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படம், ரஜினிக்கு தரமான கம்பேக் கொடுத்துள்ளது. கடந்த மாதம் 10ம் தேதி வெளியான ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதனால், ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், கலாநிதி மாறன் உட்பட ஜெயிலர் படக்குழுவினர் ரொம்பவே உற்சாகமடைந்தனர்.
ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ரஜினியின் பவர்ஃபுல் ஆக்ஷன், நெல்சனின் மேக்கிங், அனிருத்தின் பிஜிஎம் ஆகியவையுடன், சிவராஜ்குமார், மோகன்லால் இருவரின் கேமியோ பெர்ஃபாமன்ஸும் மாஸ் காட்டியது. இதனால் ஜெயிலர் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
ஜெயிலர் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்ததை அடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு, தலா 1.5 கோடி மதிப்பிலான சொகுசு கார்களை பரிசாக கொடுத்து அசத்தினார் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன். ரஜினிக்கு BMW X7, நெல்சன், அனிருத் இருவருக்கும் போர்சே கார்கள் கிஃப்டாக கிடைத்தன. இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகின.

இதனிடையே ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. தியேட்டரில் ஜெயிலர் படத்தை மிஸ் செய்த ரசிகர்கள், ஓடிடியில் பார்த்து வருகின்றனர். இதனால், மீண்டும் ஜெயிலர் படம் குறித்த டாக் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் படத்தை எம்பி கார்த்தி சிதம்பரம் சைலண்டாக கலாய்த்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கார்த்தி சிதம்பரம் எம்பி, தனது டிவிட்டரில், "நேற்று இரவு ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பார்த்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு சொகுசு காரை பரிசாக அளித்திருக்க வேண்டும்" என போஸ்ட் போட்டுள்ளார். படத்தின் பெயரை குறிப்பிடாமல் விட்டாலும், ரஜினியின் ஜெயிலர் தான் அது என நெட்டிசன்கள் கண்டுபிடித்து கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











