Jailer Memes: காவாலா ஆடுன எனக்கு கார் இல்லையா.. ஐயோ தமன்னா உனக்கு.. பறக்கும் ஜெயிலர் மீம்ஸ்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் சுமார் 600 கோடி ரூபாய் வசூலை நெருங்கிய நிலையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோருக்கு செக் மற்றும் பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கியுள்ளார். அதன் வீடியோக்கள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டான நிலையில் அதை வைத்து ஏகப்பட்ட மீம்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

ஜெயிலர் படத்தில் அட்ரஸ் ஆகவே இருந்தது தமன்னா நடனமாடிய காவலா பாடல் தான் என்றும் நடிகை தமன்னாவுக்கு எப்போது கார் பரிசாக தருவீர்கள் கலாநிதி மாறன் என ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

Jailer Memes: Tamannaah will deserve a car for Kavala dance memes trending

அதை வைத்து ரசிகர்கள் சுவாரசியமாக உருவாக்கிய நகைச்சுவை மீம்கள் இணையவாசிகளை குபீரென சிரிக்க வைத்துள்ளன. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாக ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான காவாலா பாடல் ஏகப்பட்ட வியூஸ்களை அள்ளி அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

மன்னாவுக்கு தாங்க: ஆனால் ஜெய்லர் திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு நடிகை தமன்னா மற்றும் அவர் நடனமாடிய காவாலா பாடல் பெரிதாக பேசப்படவில்லை. படம் முழுக்கவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது ஆக்சன் தான் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. ஜெயலலி திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூல் செய்ய ரஜினிகாந்த் மற்றும் அந்த படத்தின் இயக்குனர் நெல்சன் தான் காரணம் என்கிற ரீதியில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் செக் மற்றும் கார் பரிசாக வழங்கியுள்ளார்.

Jailer Memes: Tamannaah will deserve a car for Kavala dance memes trending

அனிருத்துக்கு கார் இல்லையா: எல்லோரையும் விட ஜெயிலர் படத்துக்கு அதிகமாக உழைத்தது இசையமைப்பாளர் அனிருத் தான் என்றும் அவருக்கும் ஒரு காரை பரிசாக கலாநிதிமாறன் வழங்க வேண்டும் என கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

Jailer Memes: Tamannaah will deserve a car for Kavala dance memes trending

தமன்னாவுக்கு ஸ்கூட்டி: இந்நிலையில் காவலா பாடலுக்கு நடனமாடிய எனக்கு கார் இல்லையா என கலாநிதி மாறனை பார்த்து தமன்னா கேட்பது போலவும் 'ஐயோ தமன்னா உனக்கு ஸ்கூட்டி ஆர்டர் பண்ணி இருக்கேன் நாளைக்கு கொடுக்கிற என கலாநிதிமாறன் சொல்வது போன்ற வடசென்னை டெம்ப்ளேட் மீம் ட்ரெண்டாகி வருகிறது

Jailer Memes: Tamannaah will deserve a car for Kavala dance memes trending

சர்க்கார் ட்ரோல்: கார் பொம்மையாச்சும்: வருஷா வருஷம் 5 கோடி ரூபாய் ஏத்திட்டேன் போறேன், எனக்கு ஒரு கார் பொம்மையாச்சும் தந்திருக்கலாம் என்று விஜய் ரசிகர்களையும் ரஜினி ரசிகர்கள் வேறலெவல் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X