Jailer memes: ஹைப் காவாலால வச்சேன்னு நினைச்சியா.. வேறலெவலில் டிரெண்டாகும் ஜெயிலர் பட மீம்ஸ்!
சென்னை: தமன்னா தான் ஜெயிலர் படத்தையே தூக்கி நிறுத்தப் போறாரு, ரஜினி எல்லாம் ஒண்ணுமே இல்லை என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட ரஜினி ஹேட்டர்கள் கலாய்த்து வந்த நிலையில், ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன பிறகு தமன்னா எங்கே போனார் என்றே தெரியவில்லை.
அதே நேரத்தில் என்றும் ரஜினி தான் ரியல் மாஸ் என இப்போ புரிந்திருக்கும் என ரஜினி ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்களை போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஜெயிலர் படம் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வசூலை முறியடித்து விட்டதாகவும் மீம்கள் பறக்கின்றன.
400 கோடி வசூல்: ஜெயிலர் திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி வசூலை கடந்து விட்டதாக அதிகப்படியான டிராக்கர்கள் தகவல்களை தெரிவித்துள்ளனர். மேலும், சிலர் 400 கோடி எல்லாம் இல்லை 450 கோடியே கடந்து விட்டதாகவும் கூறுகின்றனர். ப்ளூ சட்டை மாறன் இதெல்லாமே ரியல் கலெக்ஷன் இல்லை, வடை கலெக்ஷன் என தொடர்ந்து தனக்குத் தெரிந்த ஒரே ட்ரோலையே மாற்றி மாற்றி பொரித்து எடுத்து வருகிறார்.
விக்ரம் வசூல் முறியடிப்பு என மீம்ஸ்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வசூலை 6 நாட்களில் ஆண்டவரின் ஆட்டத்தையே சூப்பர்ஸ்டார் முறியடித்து விட்டார் என ரஜினியின் படக் காட்சிகளை வைத்தே மீம் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

தெறிக்கும் மாஷப்கள்: எனக்கு என்ன வயசாகிடுச்சான்னு படையப்பா படத்தில் அப்பாஸை பார்த்து கேட்கும் காட்சியுடன் தொடங்கி ஹுகும் பாடல் வரிகளை போட்டு ரஜினிகாந்தின் படக் காட்சிகளை வைத்து உருவாக்கப்பட்ட வீடியோ மாஷப்புகளும் டிரெண்டாகி வருகின்றன.
Thalaivar Mass Rampage 😇🔥🔥😬🥵🥵
— VINEETH𓃵🦖 (@sololoveee) August 16, 2023
Numbers are Earth Shattering Everywhere Worldwide #Rajinikanth #JailerBORampage #Jailerboxoffice #jailerpic.twitter.com/cNejumcbNu https://t.co/XY6f0Ro2Hy
ஹைப்பு காவாலால வச்சேன்னு நினைச்சியா: ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாகவே தமன்னாவின் காவாலா பாட்டை வைத்தே ப்ரோமோஷனை ஆரம்பித்த இயக்குநர் நெல்சன், ஹைப்பை காவாலால வச்சேன்னு நினைச்சியா.. ஹுகும்ல வச்சேன் டா என அயன் படத்தின் அட்டகாசமான டெம்பிளேட் மீமை போட்டு மாஸ் காட்டி வருகின்றனர்.
Others: வசூல் ஆல்ரெடி 450 கோடி வந்துடுச்சு. கொஞ்சம் இதோட நிறுத்திக்கலாம்ல?#JailerBORampage: ரொம்பபப தூரம் போய்ட்டேன்! #InduatryHit அடிச்சிட்டு தான் திரும்ப வர முடியும்! #Jailer #Jailerboxoffice #JailerFDFS pic.twitter.com/InPQ6DuSMn
— ketta tamilan memes (@kettatamilann) August 16, 2023
ரொம்ப தூரம் போயிட்டேன்: ஜெயிலர் வசூல் ஜெட் வேகத்தில் செல்வதை பார்த்த மத்த நடிகர்கள், இதோட நிறுத்திக்கலாமே என கேட்க.. ரொம்ப தூரம் போயிட்டேன்.. இண்டஸ்ட்ரி ஹிட் அடிச்சிட்டுத் தான் நிறுத்த முடியும் என ரஜினி சொல்வது போல ஜெயிலர் படக் காட்சியை வைத்தே மீம் போட்டு மிரட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications