ஜெயிலர் வில்லன் நடிகருக்கு கோடியில் சம்பளம்.. தேடி வரும் சான்ஸ்!

சென்னை : ஜெயிலர் படத்தில் வில்லாக நடித்து வரும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப்பின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாத்த திரைப்படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது, ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதில் மோகன்லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், புஷ்பா பட புகழ் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா,யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் வசூலை குவித்த போதும், படுமோசமான விமர்சனங்களை சந்தித்தது. பீஸ்ட் படத்திற்கு முன்பு வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் நெல்சன் படத்தில் நடிக்கப்போவது உறுதியானது. ஆனால், பீஸ்ட் படத்திற்கு வந்த மோசமான விமர்சனங்களால், நெல்சன் மாற்றப்படுவார் என்ற பேச்சுக்கள் கோலிவுட்டில் எழுந்தன.

அதிரடி ஆக்ஷன் படம்

அதிரடி ஆக்ஷன் படம்

ஆனால், எந்த மாற்றமும் இல்லாமல் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது, ஜெயிலர் இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீத முடித்துள்ள நிலையில், கடந்த வாரம் ராஜஸ்தானில் படப்பிடிப்பிடிப்பு நடந்தது. இந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்ஸர்ஸ் தயாரித்து வருகிறது.

வெறித்தனமாக லுக்கில்

வெறித்தனமாக லுக்கில்

ராஜஸ்தானில் நடந்த படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் கலந்து கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் ஜாக்கி ஷெராப் வெறித்தனமாக லுக்கில் இருக்கும் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ஜாக்கி ஷெராப் படுபயங்கரமான வில்லாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த பிகில் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

பல கோடி சம்பளம்

பல கோடி சம்பளம்

இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் படத்தில் வில்லனாக நடிக்க 4 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியும் ஜாக்கி ஷெராப்பும் பல ஆண்டுகளுக்கு முன் 'உத்தர் தக்ஷின்' என்ற இந்தி திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த படங்களில்

அடுத்தடுத்த படங்களில்

ஜெயிலர் படத்தை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நாடிக்கவுள்ளார். இதையடுத்து மேலும் லைக்காவின் தயாரிப்பில் ஒரு படத்தில் ரஜினி நடிக்க இருக்க உள்ளதாகவும், அப்படத்தின் இயக்குனர் தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X