10 பெண்களுடன் உடலுறவு.. திமிராக பேசிய ஜெயிலர் பட நடிகர்.. சரியான பாடம் புகட்டிய மனைவி!
கேரளா : மீடூ புகாரில் சிக்கிய மலையாள நடிகர் ஏடாகூடமாக பேட்டி கொடுத்து சர்ச்சையில் சிக்கியதை அடுத்து அவரது மனைவி அவரை விவாகரத்து செய்துள்ளார்.
நடிகரும், பின்னணி பாடகருமான விநாயகன், 1995 ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த 'மாந்திரிகம்' என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்
அதன் பின், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து அனைவருக்கும் தெரிந்த முகமாகவே இருக்கிறார்.

மலையாள நடிகர் விநாயகன்
2019ம் ஆண்டு metooo விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. அப்போது, தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பல்வேறு நடிகர்கள் மீது அடுக்கடுக்கான புகாரை கூறியிருந்தார். இந்த புகாரில் பல சினிமா பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வந்தன. அப்போது நடிகர் விநாயகன் மீது சமூக ஆர்வலரும் மாடல் அழகியுமான மிருதுளா தேவி என்பவர் மீ டூ புகார் அளித்திருந்தார்.

10 பெண்களுடன் உடலுறவு
அதையடுத்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர், மாடல் அழகி மிருதுளா தேவி மீடு விவகாரம் குறித்து பேசிய அவர், நான் பத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் உடலுறவு வைத்து இருக்கிறேன். ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களின் விருப்பத்தின் பேரில் தான் அனைத்தும் நடந்தது என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். மேலும், மிருதுளா தேவி மற்றும் அவரது அம்மாவிற்கும் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதான் என பேட்டியில் மிகவும் திமிராக பேசினார். நடிகர் விநாயகத்தின் இந்த திமிரான பேச்சு இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது.

மனைவியை பிரிந்தார்
பேட்டியில் 10 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டேன் என கூறியதால், மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான நடிகர் விநாயகத்தின் மனைவி பபிதா அவரை விவாகரத்து செய்துள்ளார். இந்த தகவலை நடிகர் விநாயகம் தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். வங்கி ஊழியரான பபிதா,திமிராக நடந்து தவறைக்கூட உணராத கணவருக்கு விவாகரத்து மூலம் சரியான பாடம் புகட்டி உள்ளார்.

விஷால் படத்தில்
நடிகர் விநாயகன் தமிழில் விஷால் நடித்து பெரிய ஹிட்டடித்த திமிரு திரைப்படத்தில் படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் ஆடியாளாக நடித்திருந்தார். அதன் பின் சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல் என அடுத்தடுத்து படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். தனுஷூடன் மரியான் படத்தில் நடித்த விநாயகம் அதன்பிறகு தமிழில் தலைகாட்டவே இல்லை.

மிரட்டலான வில்லன்
தற்போது, நீண்ட இடைவேளைக்குப்பிறகு ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் விநாயகன் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், இவர், மலையாளத்தில், 'கரிந்தண்டன்' படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது,


Click it and Unblock the Notifications











