சூப்பர் ஸ்டாரை இயக்கிய நெல்சனுக்கு கோலமாவு கோகிலா கம்பேக் படம்னு தெரியுமா? இங்க முழு கதையும் இருக்கு

சென்னை: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு பாணி உள்ளது. இதனால் இயக்குநர் யார் என்பதை வைத்தே படம் எப்படி இருக்கும் அல்லது படத்தில் என்ன இருக்கும் என்பதை ரசிகர்கள் யூகித்து விடுவார்கள். அப்படி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி அதில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருபவர் இயக்குநர் நெல்சன் திலீப் குமார். இவர் இன்று அதாவது ஜூன் 21ஆம் தேதி தனது 40வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.

Nelson Dilipkumar Jailer Doctor Kolamavu Kokila Beast Vettai Mannan

நெல்சன் திலீப்குமார் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். இவருக்கு ஜோடியாக யோகிபாபு நடித்தார். படத்தின் அறிவிப்பு வெளியானதும், யோகிபாபுவுக்கு ஜோடி நயன்தாராவா? இந்த படத்துல நடிக்க நயன்தாரா எதுக்கு ஒத்துக்கிட்டாங்க? அதுவும் இந்த டைரக்டர் வேற, என்பது போன்ற கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்கள். ஆனால் படம் வெளியாவதற்கு முன்னர் அனிருத்தின் இசையில் வெளியான பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

Nelson Dilipkumar Jailer Doctor Kolamavu Kokila Beast Vettai Mannan

டார்க் காமெடி: படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர், விஜயை வைத்து பீஸ்ட், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் உள்ளிட்ட படங்களை இயக்கினார். கோலமாவு கோகிலா கொடுத்த வெற்றிதான் சூப்பர் ஸ்டார் படத்தினை இயக்கும் உயரத்திற்கு படிப்படியாக உயர்த்தியது. இவர் இயக்கிய அனைத்து படங்களிலும் இருந்த விஷயம் என்றால் அது, டார்க் காமெடிதான். இதற்காகவே இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Nelson Dilipkumar Jailer Doctor Kolamavu Kokila Beast Vettai Mannan

தொடக்கமே சரிவு: கோலமாவு கோகிலா கொடுத்த வெற்றி ஒரு அறிமுக இயக்குநராக நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்த வெற்றியல்ல. இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையினைத் தொடங்கும்போதே, பெரும் சரிவைச் சந்தித்த நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்த மாஸ் கம்பேக் வெற்றி என்றே கூறலாம். இந்த கதை குறித்து பலருக்குத் தெரிந்திருக்காது. அவற்றை இங்கு காணலாம்.

Nelson Dilipkumar Jailer Doctor Kolamavu Kokila Beast Vettai Mannan

வேட்டை மன்னன்: கடந்த 2010ஆம் ஆண்டே நெல்சன் இயக்குநராக வேட்டை மன்னன் படத்தில் அறிமுகமாகவேண்டியது. சிம்பு கதாநாயகனாக நடிக்க, ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு நிக் ஆர்ட்ஸ் தயாரிக்க இருந்தது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களுக்கு பின்னர் படம் கைவிடப்பட்டது. இதற்கு முன்னர் வெளியான சிம்புவின் போடா போடி படம் மோசமான தோல்வியைச் சந்தித்ததால் நிக் அர்ட்ஸ் தரப்பில் வேட்டை மன்னன் படத்திற்கு பட்ஜெட் ஒதுக்கமுடியவில்லை. அதனால் படம் கைவிடப்பட்டது.

Nelson Dilipkumar Jailer Doctor Kolamavu Kokila Beast Vettai Mannan

பெரும் முயற்சி: இது பெரும் கனவோடு தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய நெல்சன் திலீப்குமார் வாழ்க்கையில் மிகப்பெரிய இடியாக அமைந்தது. அதன் பின்னர் எவ்வளவோ முயற்சித்தும் இந்த படத்தை மீண்டும் இயக்க முடியவில்லை. இதனால் துவண்டு போன திலீப்குமார், தனது சினிமா கனவை நோக்கி மீண்டும் ஓடினார். அதற்கு விஜய் டிவியில் உதவி இயக்குநராக பணியாற்றினார். 8 ஆண்டுகள் தனது அயராத உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தன்னை சினிமா ரேஸுக்கு தயார் படுத்திக்கொண்ட பின், கோலமாவு கோகிலா படத்தினை இயக்கினார்.

Nelson Dilipkumar Jailer Doctor Kolamavu Kokila Beast Vettai Mannan

கம்பேக்: இப்போது சொல்லுங்கள் நெல்சன் திலீப்குமாருக்கு கோலமாவு கோகிலா கம்பேக் படம்தானே. முயற்சி செய்தால் கட்டாயம் வெற்றி மட்டுமல்ல உச்சத்தையும் தொடலாம் என நிரூபித்துக் காட்டியுள்ளார் நெல்சன் திலீப்குமார். டார்க் காமெடி மூலம் மக்களை மகிழ்விக்கும் நெல்சன் திலீப்குமாருக்கு பிரைட் ஃபியூச்சர் அமைய ஃபிலிமி பீட் சார்பாக வாழ்த்துகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X