Jailer - ஜெயிலர் விழா ரத்து... அதிர்ச்சியில் ரசிகர்கள்.. இப்படி ஆகிப்போச்சே
சென்னை: Jailer Kaavaali (ஜெயிலர் காவாலி) ஜெயிலர் படக்குழு வெளியிட்டிருக்கும் அறிவிப்பால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்ற பேச்சு பலமாக எழுந்திருக்கும் சூழலில் ஜெயிலர் படம் ரஜினிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக கருதப்படுகிறது. எனவே நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தின் மூலம் ரஜினிக்கு ஒரு கம்பேக் கொடுத்து தானும் மீண்டு வருவார் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

முத்துவேல் பாண்டியன்: ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. சிறையிலிருந்து தப்பித்து செல்லும் கூட்டத்தை தடுப்பதுதான் ஜெயிலரின் ஒன் லைன் என கூறப்படுகிறது. இருந்தாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் ரஜினிக்கான மாஸ் சீன்களில் நெல்சன் குறை வைத்திருக்கமாட்டார் என்று நம்பலாம்.
இசை வெளியீட்டு விழா: படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. இதில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் படக்குழுவினர் பங்கேற்கவிருக்கின்றனர். குறிப்பாக ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு எந்த மாதிரியாக இருக்கும் என்பதை கேட்பதற்கும், பார்ப்பதற்கும் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இருக்கின்றனர். அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக ரசிகர்களுக்கு இலவசமாக 1000 பாஸ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
சிங்கிள்கள்: இதற்கிடையே படத்திலிருந்து இரண்டு சிங்கிள்கள் வெளியாகியிருக்கின்றன. முதலில் வெளியான காவாலா சிங்கிளில் தமன்னாவும், ரஜினியும் நடனமாடியிருந்தனர். அடுத்ததாக வெளியான ஹுக்குமில் ரஜினிக்கு மாஸ் ஏற்றியிருந்தனர். இவற்றில் காவாலா பாடலை இதுவரை யூட்யூபில் 70 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 6 மணிக்கு படத்தின் மூன்றாவது சிங்கிளான ஜுஜுபி பாடல் வெளியாகவிருக்கிறது. இந்தப் பாடலும் ஹுக்கும் மாதிரி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

விழா ரத்து: இந்நிலையில் காவலா பாடலின் தெலுங்கு வெர்ஷனான காவாலி பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக காவாலி பாடலுடைய வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுகிறது என்றும்; மாறாக பாடல் மட்டும் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர்.
ரஜினியின் அடுத்த படம்: ஜெயிலர் படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களில் விட்டதை ஜெயிலர், ஞானவேல் இயக்கும் படம், லோகேஷ் இயக்கும் படம் ஆகியவற்றில் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் ரஜினி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் குரலை கேட்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











