ஜெயிலர் படத்தில் இவங்க தான் ஹீரோயினா? இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கலையே.. முதல்முறையாக ரஜினியுடன்!
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் தான் எந்திரன் படத்துக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர்கிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதியதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
Recommended Video
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்கிற ஹாட் அப்டேட்டும் வெளியாகி உள்ளது.

போட்டு உடைத்த நீலாம்பரி
ரஜினிகாந்த் வராமலே ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை சத்தமில்லாமல் ஆரம்பிக்க இயக்குநர் நெல்சன் திட்டமிட்ட நிலையில், ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்கப் போவதையும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள தேதியையும் ஓப்பனாக போட்டு உடைத்தார்.

படையப்பா எஃபெக்ட் இருக்குமா
படையப்பா படத்தில் நீலாம்பரியாக மிரட்டி எடுத்த ரம்யா கிருஷ்ணனுக்கு இந்த படத்தில் மீண்டும் அதே போல ஒரு வெயிட்டான கதாபாத்திரம் இருக்குமா? அல்லது அண்ணாத்த படத்தில் மீனா மற்றும் குஷ்பு வந்ததை போல சும்மா வந்து போவாரா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஐஸ்வர்யா ராய் இல்லையா
ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பரவி வரும் புதிய தகவல் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றி உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி தேவியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் அப்போ ஜெயிலர் படத்தில் இல்லையா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமன்னா தான் ஜோடியா
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள ஜெயிலர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் ஜெயிலர் படத்தின் காஸ்டிங் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், அஜித்தை தொடர்ந்து
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்துடன் இணைந்து நடித்த நிலையில், முதல் முறையாக தமன்னா ஜெயிலர் படம் மூலம் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. விஜய்யுடன் சுறா, மற்றும் அஜித்துடன் வீரம் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் தமன்னா.

நவம்பர் ஸ்டோரி முதல் கேன்ஸ்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸ் நடிகை தமன்னாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் இந்தியா சார்பாக கேன்ஸ் திரைப்பட விழாவுக்கும் நயந்தாராவுக்கு அழைப்பு விடுக்காமல் தமன்னாவுக்குத் தான் அழைப்பு விடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











