ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ மீண்டும் வெளியானதா?.. இணையத்தில் ட்ரெண்டிங்
சென்னை: நெல்சன் திலீப்குமார் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இது ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ என்று பலரும் கூறிவருகின்றனர்.
தர்பார், அண்ணாத்த படத்தின் தோல்விகளுக்கு பிறகு ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டுமென்பதில் ரஜினி தீவிரமாக இருக்கிறார். இதனால் அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே அடுத்த படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

குழப்பத்தை உருவாக்கிய ஜெயிலர்
விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக்கொண்டிருக்கும்போதே ரஜினியை இயக்குவதற்கு கமிட்டானார் நெல்சன் திலீப்குமார். ஆனால் பீஸ்ட் படம் பயங்கரமாக அடி வாங்கியது. இதன் காரணமாக உடனடி ஹிட்டுக்கு காத்திருந்த ரஜினிக்கு நெல்சன் மீது நம்பிக்கை போய்விட்டதாகவும் எனவே படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டார் எனவும் கூறப்பட்டது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

ஜெயிலர் படத்தின் மாஸ் அப்டேட்
சூழல் இப்படி இருக்க நெல்சனும், ரஜினியும் இணையும் படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு அறிவிப்பு வெளியானது. எனவே படத்திலிருந்து நெல்சன் நீக்கப்படவில்லை என்பது உறுதியானது. மேலும் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் ஜெயிலர் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

விறுவிறுப்பாக நடந்துவரும் ஜெயிலர் ஷூட்டிங்
சென்னையில் தொடங்கிய ஜெயிலர் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. அதில் ஜெயில் செட் போட்டு பல காட்சிகள் படமாக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து சிறிது ரெஸ்ட் எடுத்த ரஜினி அதன் பிறகு நடந்த ஜெயிலர் ஷூட்டிங்கில் கலந்த்கொண்டார். சென்னையில் ஆரம்பித்த படப்பிடிப்பு கடலூர், மங்களூரு, நேபாளம் என பல இடங்களில் நடந்தது.

ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
மங்களூரில் நடந்த ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த் சமீபத்தில் விமானத்தின் மூலம் சென்றார். அங்கு ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோருடன் அவர் நடித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க நெல்சன் திலீப்குமார் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு கட்டடத்துக்குள் தனது படக்குழுவுடன் இருக்கிறார் நெல்சன் திலீப்குமார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் நிச்சயம் இது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோதான் என கூறிவருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











