Jailer :ஜெயிலர் படத்தோட க்ளைமாக்ஸ் வேற லெவல்ல இருக்கும்.. ஸ்டண்ட் மாஸ்டர் உறுதி!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் ஜெயிலர்.

ரஜினியின் 169வது படமான இந்தப் படம் சிறையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

Jailer movie stunt master Stunt siva updates about the movie and its climax scenes

ரஜினியின் ஜெயிலர் படம் : அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். சிறைச்சாலை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகிவரும் இந்தப் படத்தில் தனது போர்ஷனை நடிகர் ரஜினிகாந்த் முடித்துக் கொடுத்துள்ளார். படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது.

படத்தில் ரஜினிக்கு ரம்யா கிருஷ்ணன் மனைவியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் சென்னை, ராஜஸ்தான், மங்களூரு உள்ளிட்ட இடங்களில் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே இன்னும் 2 -3 நாட்கள் மட்டுமே படத்தின் சூட்டிங் மீதமுள்ளதாக படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக ஸ்டண்ட் சிவா செயல்பட்டுள்ளார். இந்நிலையில் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் மிகப்பெரிய ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்றும் படத்தின் க்ளைமாக்ஸ் வேறு லெவலில் வந்துள்ளதாகவும் ஸ்டண்ட் சிவா மேலும் உற்சாகம் தெரிவித்துள்ளார். படத்தில் வில்லன்கள் எல்லாம்கூட வேறு லெவலில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படத்தின் சூட்டிங்கின்போது லதா ரஜினிகாந்த், அவருடைய பேரன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் பிரியங்கா மோகன் போன்றவர்களும் விசிட் செய்துள்ளனர். இதனிடையே ரஜினி பிறந்தநாளின் போது படக்குழுவினரால் வெளியிடப்பட்ட வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Jailer movie stunt master Stunt siva updates about the movie and its climax scenes

இதில் ரஜினியின் பொறுமை, சக நடிகர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனம் உள்ளிட்டவற்றை படக்குழுவினர் பாராட்டியுள்ளனர். இதனிடையே 23 ஆண்டுகள் கழித்தும் படையப்பா படத்தில் பேசிய டயலாக் இப்போதும் ரஜினிக்கு பொருந்துவதாக ரம்யா கிருஷ்ணனும் பேசியுள்ளார். வயதானாலும் ரஜினியின் அழகும் ஸ்டைலும் குறையவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதேபோல சிவராஜ்குமார், வசந்த் ரவி உள்ளிட்டவர்களும் ரஜினிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் பீஸ்ட் படம் சொதப்பலான ரிசல்ட்டையே கொடுத்தது. இதனால் ரஜினியின் பட வாய்ப்பு அவருக்கு தொடருமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நெல்சன் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து அவருக்கு ஜெயிலர் பட வாய்ப்பை கொடுத்தார் ரஜினிகாந்த். இந்நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில், படம் எந்தமாதிரியான தாக்கத்தை ரசிகர்களிடையே கொடுக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X