ரஜினி ஒரு கருப்பு ஆடு.. ஜெயிலர் சந்தித்த அவமானம்.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: Jailer Rajinikanth (ரஜினிகாந்த்) ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில் ரஜினி விமர்சனத்திற்கு உள்ளானது குறித்து செய்யாறு பாலு அதிர்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி வசூலை வாரிக்குவித்து வருகிறது.

Jailer movie super star Rajinikanth has faced criticism, Cheyyar Balu said in an interview

நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் ரஜினியின் அதிரடியான ஆக்ஷனைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு படையெடுத்து படத்தை பார்த்து வருகின்றனர்.

700 கோடி முதல் 800 கோடி வசூல்: இந்நிலையில் சினிமா விமர்சகரான செய்யாறு பாலு ரஜினி குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், ஜெயிலர் படம் 700 கோடி முதல் 800 கோடி வசூலை எட்டி விடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஏன் என்றால், திரையரங்கில், மத யானை கூட்டம் போல பேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்குள் படையெடுக்க தொடங்கிவிட்டார்கள். படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்கிலும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பேமிலி ஆடியன்சும் படத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

நான் தான் சூப்பர் ஸ்டார்: தர்பார், அண்ணாத்த திரைப்படத்திற்கு என்ன விமர்சனம் எழுந்ததோ, அனைத்து விமர்சனத்தையும் இந்த ஒரு படத்தில் அடித்து தூள் கிளப்பி விட்டார் ரஜினிகாந்த். நான் தான் சூப்பர் ஸ்டார் என்னை அடிச்சிக்க ஆளே இல்லை, 72 வயசு ஆனாலும் நான் தான் சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் ரஜினி.

ரஜினிக்கு அந்த ராசி இருக்கு: ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில், குடிப்பழக்கம் மட்டும் எனக்கு இல்லாமல் இருந்து இருந்தால், இதைவிட உயரத்தில் இருந்து இருப்பேன் என்று சொல்லி இருந்தார். உண்மையில் அவருக்கு குடிப்பழக்கம் இல்லாமல் இருந்து இருந்தால் நிச்சயமாக முதலமைச்சராகி இருப்பார். அதற்கான ராசி, அமைப்பு எல்லாம் ரஜினிகாந்திடம் இருந்தது. தமிழ் நாட்டில் அதற்கான வாய்ப்புகள் பல முறை ரஜினிகாந்திற்கு வந்துள்ளது.

ரஜினி ஒரு துரோகி: குறிப்பாக 2002ம் ஆண்டு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் காவேரி நீரை தர மறுத்த கர்நாடகத்தை எதிர்த்து பாரதிராஜா தலைமையில் கர்நாடகத்திற்கு மின்சாரம் தரக்கூடாது என்று நெய்வேலியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் ரஜினி கலந்து கொள்ளவில்லை. இப்படி போராட்டம் நடத்தினால், கர்நாடகாவில் உள்ள 40 லட்சம் தமிழர்கள் தாக்கப்படுவார்கள் என ரஜினி போராட்டத்தை புறக்கணித்தார். ஆனால், நெய்வேலி போராட்டத்தில் பேசிய பாரதி ராஜா, ரஜினி ஒரு துரோகி என்றும், கறுப்பு ஆடு என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.

ரஜினி உண்ணாவிரதம்: நெய்வேலி போராட்டம் வெற்றிகரமாக முடிந்தவுடன், அடுத்த நாளே சென்னை சேப்பாக்கத்தில், காவேரி நீரைக்கேட்டு ரஜினிகாந்த் தனியாக உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்தார். இந்த உண்ணாவிரதத்திற்கு திரைப்பிரபலங்கள் வரமாட்டார்கள் என்று நினைத்த போது, பாரதி ராஜாவை தவிர அனைத்து நட்சத்திரங்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

அவர் என் நண்பர்: உண்ணாவிரதம் மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து, உண்ணாவிரதத்துக்குப் பிறகு ஆளுநர் மாளிகை சென்ற ரஜினி, அப்போது ஆளுநராக இருந்த ராமமோகன் ராவின் செயலாளரிடம் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்துவிட வேண்டும் என மனு அளித்தார். இதையடுத்து, செய்தியாளர்கள் பாரதிராஜா உங்களை துரோகி என்றும், கறுப்பு ஆடு என்று சொல்லி இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்கள், அதற்கு பதில் அளித்த ரஜினி, அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார், அவர் என் நண்பர் தான் என்று ரஜினி கூலாக பதில் அளித்திருந்தார்.

ரஜினி நடத்திய உண்ணாவிரதத்திற்கு வந்த ஆதரவைப் பார்த்து ஒட்டு மொத்த அரசியல் கட்சித் தலைவர்களும் மிரண்டு போனார்கள் என்று செய்யாறு பாலு அந்த வீடியோவில் விரிவாக பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X