Rajinikanth: ரஜினின்னாலே மாஸ் தானே.. வைரலாகும் ஜெயிலர் டீமின் சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் வீடியோ!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நாளைய தினம் தன்னுடைய 74வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதையொட்டி முன்னதாகவே திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள், பட நிறுவனங்கள் என அடுத்தடுத்து அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த நேரத்தில் கூலி படத்தின் சூட்டிங்கிற்காக வட இந்தியா சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

எப்போதும் அவரது பிறந்தநாளில் சென்னையில் இருப்பதை தவிர்த்து வருகிறார் ரஜினிகாந்த், இமயமலை, அமெரிக்கா என அடுத்தடுத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ள ரஜினிகாந்த், தன்னுடைய பிறந்தநாளை அடுத்தே சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் ஜெயிலர் டீம் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

rajinikanth birthday

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இளம் இயக்குநர்களுடனும் முன்னணி இயக்குநர்களுடனும் கைகோர்த்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் ரஜினிக்கு மாஸான வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக உயிரிழந்ததாக நினைத்த தன்னுடைய மகனின் மறைவுக்கு பழிவாங்கும் தந்தையாக அதிரடி கிளப்பினார் ரஜினிகாந்த். ஒரு கட்டத்தில் தன்னுடைய மகன் குறித்து உண்மை தெரிய வந்தவுடன் அவர் எடுக்கும் முடிவு இந்த படத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

கூலி பட சூட்டிங்கில் ரஜினி: இந்த ஆண்டிலும் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து லால் சலாம், வேட்டையன் படங்கள் ரிலீசான நிலையில் இதில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான வேட்டையன் படம் அதிரடியாக ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியுள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் வசூலில் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் இயக்கத்திலேயே கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் சூழலில் படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்.

நாளை ஜெயிலர் 2 அறிவிப்பு?: ஜெயிலர் 2 படம் குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் தற்போது நெல்சன் திலீப்குமார் ஈடுபட்டு வரும் நிலையில் நாளைய தினம் ரஜினி பிறந்தநாளில் ஜெயிலர் 2 அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய தினம் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 74வது பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில் அவருக்கு முன்னதாக ஜெயிலர் டீம் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாளைய தினம் ஜெயிலர் 2 அறிவிப்பிற்கு முன்னோட்டமாக இந்த வீடியோ காணப்படுகிறது.

rajinikanth birthday

பழைய வாழ்த்து வீடியோ: கடந்த 2022ம் ஆண்டில் வெளியான இந்த வாழ்த்து வீடியோவில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், நடிகர்கள் யோகி பாபு, சிவராஜ்குமார், வசந்த் ரவி நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். ரஜினி குறித்த பாராட்டுக்களையும் அவர்கள் இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளனர். இதில் ரஜினி என்றாலே மாஸ் தானே என்று நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார். அதேபோல நடிகை ரம்யா கிருஷ்ணனும் படையப்பா படத்தில் வரும் வயதானாலும் ஸ்டைல் குறையவில்லை என்ற டயலாக்கை பேசியுள்ளார் இந்த வீடியோ அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்த நிலையில் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X