ஜெயிலரில் பயமுறுத்திய விநாயகன்.. ஸ்டேஜ் பேச்சுக்கு ஏன் பயப்படுகிறார்?

சென்னை: டிசம்பர் 5ந் தேதி மம்மூட்டி நடிப்பில் 'களம் காவல்' என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள இந்த படத்தில், மலையாள மெகாஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடித்துள்ளார். பட வெளியீடு நெருங்கி வரும் நிலையில், நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விநாயகன் திறந்த மனதுடன் பகிர்ந்த தகவல்கள் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய விநாயகன், பொதுவெளியில் பேசுவதில் வரும் சிரமங்களை நேரடியாக கூறினார். "எனக்கு பொதுவெளியில் எப்படி பேசுவது என்பது தெரியவில்லை. மக்களின் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசுவதில் எனக்கு பிரச்சனை இருக்கிறது. என்னை நான் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. எனக்கு இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கிறது தான்... ஆனால் அங்குள்ள 10 பேரில் யாராவது இருவர் தேவையில்லாத கேள்விகளை கேட்டுவிடுகிறார்கள். அந்த கேள்வி கேட்கப்பட்ட உடன், என் இயல்பான சுபாவத்தால் நான் டென்ஷனாகி, நான் என்ன பேசுகிறேன் என எனக்கே தெரியாமல் பேசிவிடுகிறேன். இதனால் தான் பொதுவெளிக்கு வருவதை தவிர்த்து வந்துவிட்டேன் என்றார்.

Vinayaka Interview
Photo Credit:

நடிகர் விநாயகன்: நடிகர் விநாயகனின் இந்த வார்த்தைகள் அங்கு இருந்தவர்களையும் ரசிகர்களையும் உணர்ச்சி வசப்பட வைத்தது. திரையில், முரட்டுத்தனமாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தி படம் பார்ப்பவர்களை பயமுறுத்தும் விநாயகன், நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற நெருக்கடிகள் இருப்பதாக கூறி உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.விநாயகனின் மனம் திறந்த பேச்சின் சில பகுதி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மலையாள நடிகரான இவர் தமிழில், திமிரு, மரியான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் வில்லனாக நடித்தன் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அந்த படத்தில் இவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் படி இருக்கம். சைகோ தனமாக வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X