Jailer Trailer - என்ன பீஸ்ட், பாட்ஷா வாடை எல்லாம் அடிக்குது.. ஜெயிலர் ட்ரெய்லரில் இதை நோட் பண்ணீங்களா
சென்னை: Jailer Trailer (ஜெயிலர் ட்ரெய்லர்) ஜெயிலர் படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் பல படங்களை கலந்து நெல்சன் உருவாக்கியிருக்கிறாரோ என கேள்வி எழுப்பிவருகின்றனர்.
தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்விக்குப் பிறகு ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என பஞ்சாயத்து ஆரம்பித்திருக்கும் சூழலில் இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதேபோல் நெல்சன் திலீப்குமாரும் பீஸ்ட் படத்தில் விட்டதை இதில் பிடிக்க முனைப்பு காட்டியிருக்கிறார். படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் என பான் இந்தியா ஸ்டார்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

ஜெயிலர் ட்ரெய்லர்: படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதனையடுத்து படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ஆக்ஷன் காட்சிகள், நெல்சன் திலீப்குமாரின் டார்க் காமெடி என கலந்துகட்டி வந்திருக்கிறது. மேலும் ரஜினிகாந்த்துக்கென்று மாஸ் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் ஜெயிலர் ட்ரெய்லரை புகழ்ந்துவருகின்றனர்.
கதை இதுதான்: ட்ரெய்லர் வெளியாவதற்கு முன்னதாகவே ஜெயிலர் படத்தின் கதை குறித்த தகவல்கள் வெளியாகின. அதன்படி ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டிய என்ற ரிட்டையர்டு ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்றும்; தனது மகனான வசந்த் ரவியை ஒரு கும்பலிடமிருந்து மீட்பதுதான் ஒன்லைன் எனவும் கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயிலர் ட்ரெய்லரும் இருக்கிறது. எனவே படத்தில் மாஸ் சீன்களுக்கு பஞ்சம் இருக்காது என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் தலைவர் ரசிகர்கள்.

இதை நோட் பண்ணீங்களா: இப்படி ட்ரெய்லருக்கு ஒருபக்கம் வரவேற்பு கொடுத்து நிம்மதியாக இருந்தாலும் மறுபக்கம் ட்ரோல்களும் பறந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே, 'இந்த நோய் இருக்கவங் பூனை மாதிரிதான் இருப்பார்கள். ஆனால் திடீரென புலியாக மாறிவிடுவார்கள்' என விடிவி கணேஷ் சொல்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் பீஸ்ட் ட்ரெய்லரிலும் இப்படித்தான் விஜய்க்கு ஒரு மனநல மருத்துவர் கூறுவது போல் இருக்கும் அதேபோல் இதிலும் இருக்கிறதே என்கின்றனர்.
பாட்ஷா: அதுமட்டுமின்றி ட்ரெய்லரின் ஒரு காட்சியில் ரஜினி நடந்து வர அவருடன் சிலர் நடந்துவருவார்கள். அதனைப் பார்த்த ரசிகர்கள் இந்தக் காட்சிகள் அப்படியே பாட்ஷா படத்தை நியாபகப்படுத்துகின்றனர் என்கிறார்கள் ரசிகர்களில் ஒருதரப்பினர். அதேபோல் படத்தின் லொக்கேஷன்களை பார்க்கும்போதும் பீஸ்ட் வாடை அடிக்கிறது என்றும்; மகன், பேரன் என்பதை பார்க்கும்போது விக்ரம் படத்தின் நியாபகம் வருகிறது.

ஒருவேளை அந்தப் படங்களை எல்லாம் கலந்துதான் நெல்சன் ஜெயிலரை கொடுத்திருப்பாரோ என சந்தேகத்தை கிளப்பிவருகின்றனர். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இருக்காது படம் சும்மா தெறிக்கும் என ரஜினி ரசிகர்கள் கூறுகின்றனர். அனைத்துக்கு விடை ஆகஸ்ட் 10ஆம் தேதி தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











