ஜெயிலர் ரிலீஸ் தேதியில் மாற்றமா? வெளியானது புதிய தகவல்
சென்னை: ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் புதிய தகவல் பரவிவருகிறது.
சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்குவதாக இருந்தார் நெல்சன் திலீப்குமார். அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்த சூழலில் அந்தப் படம் சில காரணங்களால் ட்ராப் ஆனது.

கோலமாவு கோகிலா மூலம் எண்ட்ரி கொடுத்த நெல்சன் திலீப்குமார்
முதல் படம் ட்ராப் ஆனாலும் மனம் தளராத நெல்சன் திலீப்குமார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார். ஹீரோயின் சப்ஜெக்ட்டாக வெளியான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அப்படத்துக்கு அனிருத் இசையமைப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது அந்தப் படம்.

நூறு கோடி வசூல் செய்த நெல்சன் படம்
கோலமாவு கோகிலாவின் வெற்றிக்கு அடுத்ததாக தனது நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். டார்க் காமெடி ஜானரில் உருவான டாக்டர் படத்தில் ப்ரியாங்கா அருள்மோகன், வினய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி 100 கோடி ரூபாயையும் வசூலித்து சாதனை படைத்தது.

பீஸ்ட் மோடில் நெல்சன் திலீப்குமார்
முதல் இரண்டு படங்களும் பிரமாண்ட வெற்றி பெற்றதால் நெல்சன் திலீப்குமார் முன்னணி இயக்குநர்கள் வரிசைக்கு நகர ஆரம்பித்தார். அந்த சமயத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் மூலம் நெல்சன் பெரும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் பீஸ்ட் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் நெல்சன் திலீப்குமார் சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.

ஜெயிலரில் கமிட்டான நெல்சன் திலீப்குமார்
சூழல் இப்படி இருக்க கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் ரஜினியுடன் கைகோர்த்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வு பெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினியுடன் மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

ஜெயிலர் படம் எப்போது ரிலீஸ்
படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கவிருக்கின்றன. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படமானது ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பதாக கூறப்பட்டது. அதேபோல் படத்தின் டீசர் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications











