ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் சம்பவம்.. சென்ட் அடிச்சிட்டு கையில் கத்தியுடன் கிளம்புறாரே ரஜினி!

சென்னை: சூப்பர் ஸ்டார் என்றும் தலைவா என்றும் ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியளவில் பல பிரபலங்கள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

சச்சின் டெண்டுல்கர், ஷாருக்கான், கமல்ஹாசன் என ஏகப்பட்ட பிரபலங்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கான ஸ்பெஷல் ட்ரீட்டாக தற்போது ஜெயிலர் படத்தின் முத்துவேல் பாண்டியனின் தரமான சம்பவம் அடங்கிய அறிமுக வீடியோ வெளியாகி உள்ளது.

பீஸ்ட் படத்துக்கு பிறகு

பீஸ்ட் படத்துக்கு பிறகு

நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படம் 100 கோடி நாயகனாக அவரை உயர்த்தியது. கோலமாவு கோகிலா படத்தில் நெல்சனின் டார்க் காமெடியை பார்த்து ரசித்த விஜய் பீஸ்ட் படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால், அந்த படம் சொதப்பிய நிலையில், தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார்.

முத்துவேல் பாண்டியன்

முத்துவேல் பாண்டியன்

தர்பார், அண்ணாத்த படங்கள் தொடர்ந்து எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் இயக்குநர் நெல்சனை வைத்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கண்ணாடி எல்லாம் அணிந்து கொண்டு டாக்டர் சிவகார்த்திகேயன் போல டிரெஸ் கோடில் செம நீட்டாக ரெடியாகும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

சிட்டி 2.0

சிட்டி 2.0

செம கூலாக , நீட்டா டிரெஸ் பண்ணிட்டு, சிட்டி ரோபோ 2.0 கண்ணாடி முன்பாக ரெடியாகி நிற்பது போன்ற காட்சியுடன் சென்ட் எல்லாம் அடித்துக் கொண்டு கையில் பட்டா கத்தியுடன் சம்பவம் பண்ண பாட்ஷா கிளம்பும் ஜெயிலர் படத்தின் அட்டகாசமான வீடியோ ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பர்த்டே ட்ரீட்

பர்த்டே ட்ரீட்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சச்சின், ஷாருக்கான், கமல்ஹாசன், தனுஷ் தொடங்கி ஏகப்பட்ட பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வரும் நிலையில், ரசிகர்களுக்கான ட்ரீட்டாக தற்போது ஜெயிலர் படத்தின் அறிமுக வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

ஸ்டைல் சாம்ராட் ரஜினி

ஸ்டைல் சாம்ராட் ரஜினி

சிம்பிளான சட்டை, இன் பண்ண பேன்ட், பவர் கிளாஸ், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் உடன் சாதாரண வீட்டில் இருந்து வெளியே வரும் ரஜினிகாந்த், அந்த பட்டா கத்தியை உருவும் காட்சியில் தான் ஒரு ஸ்டைல் சாம்ராட் என்பதை அட்டகாசமாக காட்டி உள்ளார். ஷூ லேஸ் போடும் அந்த காட்சியே டிரெண்டிங்கை தெறிக்கவிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X