Jailer Negatives: வில்லன் வெயிட்டா.. வீக்கா.. அடிக்கடி க்ரிஞ்ச் பண்ண நெல்சன்.. ஜெயிலர் மைனஸ்கள்!
சென்னை: வில்லனை வெயிட்டாக காட்ட வேண்டும் என்றும் அதே சமயத்தில் சூப்பர்ஸ்டார் முன் மண்டியிட வேண்டும் என்றும் முரணாகவே வில்லன் ரோலை இயக்குநர் நெல்சன் வடிவமைத்திருப்பதே இந்த படத்துக்கு மிகப்பெரிய மைனஸ் ஆக உள்ளது.
ஆரம்பத்தில் ரித்து ராக்ஸ் உடன் வரும் யூடியூப் காட்சிகள் ஆரம்பித்து, யோகி பாபுவுடன் காரில் வரும் காமெடி மற்றும் ஆந்திராவில் புஷ்பா சுனிலை வைத்து நடத்திய டோப்பா காமெடி எல்லாம் வேறலெவல் க்ரிஞ்ச் என்று தான் சொல்ல வேண்டும்.

அதே போல வசந்த் ரவியையும் படத்தில் கேமியோ ரோலாக மாற்றியதும் அவரது கதாபாத்திரத்திலும் எந்தவொரு அழுத்தமும் இல்லாதது கடைசியிலும் அவர் பர்ஃபார்ம் பண்ணாமல் தேமே என நிற்பது எல்லாம் கடுப்பை கிளப்புகிறது.
அரை மணி நேரம் ஆசா பிளேடு: ஜெயிலர் படத்தின் ஆரம்பத்திலேயே ரத்தமாறே பாடலை போட்டு ரசிகர்களை தூங்க வைத்து விடுகின்றனர். மாணிக்கமாக ரஜினியை பாட்ஷாவில் காட்டினாலும் அந்த காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்து வந்த நிலையில், ரிட்டயர்ட் போலீஸ் அதிகாரியான முத்துவேல் பாண்டியனை காட்டும் காட்சிகள் எல்லாம் ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்ப்பதை போன்ற ஃபீலிங்கையே ஏற்படுத்தி ஆரவாரம் செய்ய காத்திருந்த ரசிகர்களை ஒரு அரை மணி நேரம் ஆசா பிளேடு போட்டு இயக்குநர் நெல்சன் அறுத்து விட்டது படத்திற்கு ஆரம்பமே மைனஸ் ஆக மாறியது.
தமன்னா போர்ஷனே தண்டம்: அதே போல இரண்டாம் பாதியில் கதை அப்படியே ஆந்திரா நோக்கி நகர்கிறது. அங்கே புஷ்பா சுனில், தமன்னா மற்றும் மாகாளி சுனிலின் முக்கோண காதல் காட்சிகள் டார்க் காமெடியாக இல்லாமல் படத்திற்கே தேவையில்லாத ஆணியாக மாறிவிடுவது தான் மிகப்பெரிய டார்ச்சராக பார்க்கப்படுகிறது.
டோப்பா காமெடி ஏன் நெல்சன்: விஜய், ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்கி விட்டு இயக்குநர் நெல்சன் புஷ்பா சுனில் மற்றும் மாகாளி சுனில் ரெட்டி இருவரும் இணைந்துக் கொண்டு செய்யும் டோப்பா காமெடியெல்லாம் ரசிகர்களை சிரிக்க வைக்காமல் முகம் சுளிக்க வைக்கிறது. ஏற்கனவே சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இடம்பெற்றதை போன்ற காட்சிகளே இடம்பெற்று ரசிகர்களை சத்திய சோதனைக்கு ஆளாக்கி உள்ளது. எந்த உள்நோக்கத்துடன் நெல்சன் இந்த விக் காமெடியை வைத்தார் என்றும் ரசிகர்கள் மாறி மாறி கலாய்த்தும் சண்டை போட்டுக் கொண்டும் வருகின்றனர்.
நீலாம்பரியை இப்படி பண்ணலாமா: இப்படியொரு மொக்கையான கதாபாத்திரத்திற்கு நீலம்பரி ரம்யா கிருஷ்ணன் வேண்டுமா? என்றும் படையப்பாவில் அவரை கே.எஸ். ரவிக்குமார் பயன்படுத்தியது போல பண்ணாமல் பாபாவில் பண்ணது போல வீணடித்து விட்டாரே நெல்சன் என்கிற குற்றச்சாட்டுக்களும் கிளம்பி உள்ளன.
வில்லன் கேரக்டரிலேயே குழப்பம்: வில்லன் விநாயகனை மிரட்டலாக சிலை கடத்தல் கும்பலின் தலைவனாக காட்டினாலும், எப்போதும் மகாபாலிபுரத்தில் சிலைகளுக்கு நடுவே உட்கார வைத்தும் ரஜினிக்கு முன்னாடி டம்மி செய்தும், மற்ற நேரங்களில் சுத்தியலை எடுத்து கொடூரமாக கொலை செய்யும் நபராகவும் காட்டியிருக்கிறார் நெல்சன்.
அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் எழுதும் போதும், ஏகப்பட்ட குழப்பத்தில் நெல்சன் மாட்டிக் கொண்டாரா என்பதும் இந்த ஜெயிலர் படத்தின் மைனஸ்கள் அதிகளவில் இருப்பதற்கு ஒரே காரணம் இயக்குநர் நெல்சன் தான் என்றும் படத்தை காப்பாற்றியது சூப்பர்ஸ்டார் மட்டுமே என்பது தெளிவாக தெரிகிறது. அடுத்த படத்தில் திரைக்கதையிலும், நெல்சனிடம் எதிர்பார்க்கும் டார்க் காமெடியிலும் அவர் இன்னமும் ஸ்ட்ராங்கான கம்பேக் கொடுக்கவேண்டும்.


Click it and Unblock the Notifications











