Jailer: “தலைவரே இன்னொரு ரவுண்ட் போகலாமா..?” ஜெயிலர் பார்ட் 2... நெல்சனின் மாஸ்டர் ப்ளான்!
சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் 10ம் தேதி வெளியானது.
சுதந்திர தின விடுமுறை ஸ்பெஷலாக வெளியான ஜெயிலர், ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 400 கோடி எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஜெயிலர் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் இதன் இரண்டாம் பாகம் எடுக்க ரெடியாகிவிட்டாராம் நெல்சன்.
விரைவில் ஜெயிலர் 2ம் பாகம்: சூப்பர் ஸ்டார் ரஜினி, நெல்சன் திலீப்குமார் கூட்டணி முதன்முறையாக இணைந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம், எதிர்பார்த்ததை விடவும் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் 10ம் தேதி ரிலீஸான ஜெயிலர் 6 நாட்களில் 400 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும், ஜெயிலர் வசூல் குறித்த அப்டேட்ஸ் ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. பேட்ட, தர்பார், அண்ணாத்த படங்கள் ரஜினிக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.
அதனால், ஜெயிலர் படத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லாமல் போய்விடும் என சொல்லப்பட்டது. ஆனால், சூப்பர் ஸ்டார் என்றால் எப்போதுமே மாஸ் தான் என நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த். ஜெயிலர் படம் முழுவதும் ரஜினியின் ஃபேன் பாய் சம்பவமாக அமைந்துள்ளது. முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினியை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
ரஜினி மட்டும் இல்லாமல் கேமியோ ரோலில் நடித்துள்ள மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் தரமான சம்பவம் செய்துள்ளனர். இதனால், கோலிவுட் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையெல்லாம் பார்த்த நெல்சன் அடுத்து மாஸ்டர் ப்ளான் போட்டுள்ளாராம். அதாவது ஜெயிலர் 2ம் பாகம் எடுக்க ரெடியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
ஜெயிலர் வெளியான பின்னர் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்தார் நெல்சன். அப்போது ஜெயிலர், பீஸ்ட், டாக்டர் படங்களின் 2ம் பாகம் இயக்க ஐடியா இருப்பதாக கூறியிருந்தார். இதில் முதலாவதாக ஜெயிலர் 2 உருவாகும் என சொல்லப்படுகிறது. இப்படத்திற்கான கதை எழுதும் வேலைகளில் நெல்சன் பிஸியாகிவிட்டதாகவும், இதன்மூலம் மீண்டும் ரஜினி, சன் பிக்சர்ஸ், அனிருத் கூட்டணியில் இணையவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தரப்பிலும் ஜெயிலர் 2ம் பாகம் தயாரிக்க க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக தெரிகிறது. தலைவர் 170, தலைவர் 171 படங்களில் நடித்து முடித்த பின்னர், ஜெயிலர் 2க்கு ரஜினி கால்ஷீட் கொடுப்பார் எனவும் ஒரு டாக் கோலிவுட்டில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











