Jailer: “வேற மாரி வேற மாரி நெல்சா..” ஜெயிலர் படத்துக்காக பல கோடி சம்பளம்... மாஸ் கம்பேக் இது!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயிலர், ரஜினி, நெல்சன் இருவருக்குமே கம்பேக் கொடுக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஜெயிலர் படத்திற்காக இயக்குநர் நெல்சன் வாங்கிய சம்பளம் குறித்து தெரியவந்துள்ளது.
ஜெயிலர் படத்துக்காக நெல்சன் வாங்கிய சம்பளம் : இந்தியளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக ரஜினியின் ஜெயிலர் பார்க்கப்படுகிறது. பேட்ட, தர்பார், அண்ணாத்த என கடைசியாக ரஜினி நடித்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கெல்லாம் சேர்த்து வைத்து சூப்பர் ஸ்டார் ரஜினி ஜெயிலரில் தரமான சம்பவம் செய்திருப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.
கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் பீஸ்ட் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் நெல்சன். 4வது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்த நெல்சன், தற்போது ஜெயிலரையும் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஜெயிலர் நாளை வெளியாகிறது. ரஜினிக்காக திரைக்கதை, மேக்கிங் என அனைத்திலும் செம்ம மாஸ் காட்டியுள்ளாராம் நெல்சன்.
முன்னதாக நெல்சன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான பீஸ்ட் படத்தில் விஜய் நடித்திருந்தார். விஜய், நெல்சன், அனிருத் என செம்ம வெயிட்டான காம்போவில் வெளியான பீஸ்ட் வசூலில் மாஸ் காட்டினாலும், விமர்சன ரீதியாக பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. இதனால், ரஜினியும் சன் பிக்சர்ஸும் ஜெயிலர் படத்தில் இருந்து நெல்சனை நீக்கிவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ரஜினி தான் கொடுத்த வாக்குறுதியில் உறுதியாக இருந்தார்.

ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சனுக்கே வழங்கியதோடு, இதுகுறித்து இசை வெளியீட்டு விழாவிலும் பேசியிருந்தார். இப்படி பலவிதமான நெருக்கடிகளையும் விமர்சனங்களையும் கடந்து ஜெயிலர் படத்தை இயக்கியுள்ளார். பாடல்கள், ட்ரெய்லர் மூலம் ஜெயிலருக்கு ரசிகர்களிடம் செம்ம ஹைப் உருவாகியுள்ளது. கண்டிப்பாக இந்தப் படம் சூப்பர் ஸ்டாரின் சம்பவமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயிலர் நாளை வெளியாகவுள்ள நிலையில், ஃபைனல் வெர்ஷனை படக்குழுவினர் பார்த்துவிட்டார்களாம். அதில், நெல்சனின் மேக்கிங்கை பார்த்து பலரும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், இப்படத்திற்காக நெல்சனுக்காக 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 4வது படத்திலேயே 10 கோடி வரை சம்பளம் வாங்கும் நெல்சனை பார்த்து கோலிவுட்டே ஷாக்கிங் ஆகியுள்ளது. அதேநேரம் ஜெயிலர் ஹிட்டானால் நெல்சனின் மார்க்கெட் இன்னும் உச்சம் தொடும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications