Jailer: நெல்சன் இன்னும் மாறவே இல்ல... ஜெயிலரும் அதே பீஸ்ட் பார்முலா தானா... அப்போ சோலி முடிஞ்ச்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஜெயிலர் ரிலீஸ் தேதியுடன் வெளியான மினி டீசரில் ரஜினியின் காஸ்ட்யூமை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
முக்கியமாக ஜெயிலர் அப்படியே விஜய்யின் பீஸ்ட் படத்தின் பார்முலாவில் உருவாகியுள்ளதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

நெல்சன் இன்னும் மாறவே இல்ல சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. மினி டீசருடன் வெளியான ஜெயிலர் ரிலீஸ் அப்டேட் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதேநேரம், நெட்டிசன்களால் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது.
முன்னதாக சில மாதங்களுக்கு முன்னர் ஜெயிலர் படத்தில் ரஜினியின் கேரக்டரை படக்குழு அறிமுகம் செய்திருந்தது. அதன்படி, முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் ரஜினி. இதனை மினி ப்ரோமோ வீடியோவுடன் படக்குழு வெளியிட்டிருந்தது. அதில், சூப்பர் ஸ்டார் ரஜினி லைட் பிரவுன் கலர் பேண்டும், ப்ளு கலரில் சட்டையும் அணிந்து டக் இன் செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று ரிலீஸ் தேதியுடன் வெளியான டீசரில், அதே காஸ்ட்யூம் உடன் தோன்றினார் ரஜினி. இதனை வைத்து பார்க்கும் போது ஜெயிலர் படம் முழுவதும் ரஜினிக்கு ஒரே காஸ்ட்யூம் தானா என சந்தேகம் எழுந்துள்ளது. முன்னதாக நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்திலும் விஜய் ஒரே காஸ்ட்யூமில் தான் வலம் வருவார். பீஸ்ட் படத்தின் முதல் ஓரிரு காட்சிகளில் மட்டும் விஜய் வேறு காஸ்ட்யூமில் வருவார்.
தற்போது அதே பார்முலாவில் தான் ஜெயிலர் படத்திலும் ரஜினியின் காஸ்ட்யூம் உள்ளது. இதனால், ஜெயிலர் படத்தின் கதை ஒரே நாளில் நடைபெறுவதாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே பீஸ்ட் படத்தையும் இப்படி எடுத்து தான் விஜய்யை சோலி முடித்தார் நெல்சன். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினியையும் சோலி முடிக்க நெல்சன் முடிவெடுத்துவிட்டார் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் டாக்டர் வெற்றியை பார்த்தே பீஸ்ட் படத்தை இயக்க விஜய் வாய்ப்புக் கொடுத்தார். ரஜினியும் டாக்டர் படத்தை நம்பியே நெல்சனை தலைவர் 169 படத்தின் இயக்குநராக்கினார். அதுவே தற்போது ஜெயிலர் என்ற டைட்டில் உருவாகி வருகிறது. ஆனால், பீஸ்ட் படுதோல்வி அடைந்ததும் நெல்சனை தூக்கிவிடலாம் என சன் பிக்சர்ஸ் நினைத்ததாம். ஆனால், ரஜினி தான் அது வேண்டாம் என தவிர்த்துவிட்டார்.
நெல்சனுக்காக பாவம் பார்த்தது தற்போது ரஜினிக்கே வினையாகி விட்டது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரஜினியை ஒரே காஸ்ட்யூமில் பார்க்க ரசிகர்கள் ரெடியாக இருந்தாலும், நெல்சனின் கதை எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் மிரண்டு போயுள்ளார்களாம். அண்ணாத்த தோல்வியில் இருந்து மீண்டுவர வேண்டும் என நினைத்த ரஜினிக்கு, ஜெயிலர் படமும் சோதனையாக அமைந்துவிடும் என்றே சொல்லப்படுகிறது. ஆனாலும், ஜெயிலர் திரைப்படம் கண்டிப்பாக ஹிட்டாகும் என இயக்குநர் நெல்சன் உறுதியான நம்பிக்கையில் உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











