Jailer: ஜெயிலர் மெகா ப்ளாக்பஸ்டர்... ‘வசூல் என்னன்னு சொல்லுங்கப்பு..’ வம்பிழுக்கும் நெட்டிசன்கள்

சென்னை: அதிகம் எதிர்பார்ப்பில் இருந்த ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் 10ம் தேதி வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கம்பேக் படமாக அமைந்துள்ள ஜெயிலர் இதுவரை 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து அபிஸியலாக அறிவிப்பு வெளியாகாத நிலையில், ஜெயிலர் புதிய ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

'ஜெயிலர் மெகா ப்ளாக் பஸ்டர்' என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த ப்ரோமோவை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

 Jailer: Netizens are trolling the mega-blockbuster promo of Rajinis Jailer

ப்ரோமோவா முக்கியம்... வசூல் என்ன..?: ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸானது. உலகம் முழுவதும் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜெயிலர் வருகைக்காக தமிழில் வேறு எந்த படங்களும் கடந்த வாரம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் ஒன்மேன் ஆர்மியாக மாஸ் காட்டியது ஜெயிலர்.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம் போன்ற மற்ற மொழி மாநிலங்களிலும் ஜெயிலர் ரியல் சம்பவம் செய்துள்ளது. பேட்ட, தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்வியால் துவண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் வெறித்தனமான கம்பேக் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரும் ஜெயிலர் படத்தில் ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஜெயிலர் படம் முதல் 6 நாட்களில் 400 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாகவும், மற்ற மாநிலங்கள், உலக நாடுகள் சேர்த்து ஒட்டுமொத்தமாக 400 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை தொடர்ந்து ட்ரோல் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் அனைத்தும் சுத்த 'வடை' என ட்விட்டரில் பங்கம் செய்து வருகிறார். இதற்கெல்லாம் பதிலடியாக படக்குழு தரப்பில் இருந்து விரைவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தற்போது சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து ஜெயிலர் படத்திற்கு புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 Jailer: Netizens are trolling the mega-blockbuster promo of Rajinis Jailer

இதில், ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் குறித்து அப்டேட் இருக்கும் என ரசிகர்களுடன் ஆர்வத்துடன் பார்த்தனர். ஆனால், அதனை க்ளிம்ப்ஸ் வீடியோவாக மட்டுமே வெளியிட்டுள்ள படக்குழு, 'மெகா ப்ளாக்பஸ்டர்' எனவும் குறிப்பிட்டுள்ளது. ஜெயிலர் 'மெகா ப்ளாக்பஸ்டர்' என்பதனை மட்டும் ப்ரோமோவாக வெளியிட்டுள்ள இந்த பதிவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஜெயிலர் சூப்பர் ஹிட், ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் என எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து எந்த அப்டேட்டும் இல்லையே என கேள்வி எழுப்பியுள்ளனர். கலெக்‌ஷன் என்னன்னு சொன்னால் படம் வெற்றியா அல்லது தோல்வியா..? என்பதை நாங்கள் முடிவு செய்துகொள்கிறோம் எனவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இதனால் ஜெயிலர் படத்திற்கு பெரிதாக வசூல் ஆகவில்லையோ என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X