Jailer: “இயற்பியல், வேதியியல், ரஜினியியல்..” அலப்பறையை கூட்டிய 70ஸ் கிட்ஸ் ரஜினி ரசிகர்

சென்னை: ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஜெயிலருக்கு நல்ல ஓபனிங் கிடைத்தாலும் கலவையான விமர்சனங்களால் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். முக்கியமாக ரஜினியின் 70ஸ் கிட்ஸ் ரசிகர் செய்த அலப்பறை இணையத்தையே வைரலாக்கியுள்ளது.

 Jailer: Netizens trolled Rajinikanths Jailer movie

அலப்பறையை கூட்டிய 70ஸ் கிட்ஸ் ரஜினி ரசிகர்: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கம்பேக் கொடுக்கும் படமாக எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர், தற்போது உலகம் முழுவதும் வெளியாகிவிட்டது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நெல்சன், ஜெயிலரை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி என மாஸ் ஹீரோக்களுடன் கூட்டணி வைத்துள்ள நெல்சன் அடுத்து யாருடன் இணையப் போகிறார் என எதிர்பார்க்க வைத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலரில் ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே ஜெயிலர் ஃபீவர் ரசிகர்களை ஆட்டிப் படைத்து வரும் நிலையில், தற்போது அது உச்சம் தொட்டுள்ளது. முக்கியமாக 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் ரசிகர்களை விட ரஜினியின் 70ஸ் கிட்ஸ் ரசிகர்கள் அதீதமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"தலைவர் தான் நிரந்தரம்... ஒரேயொரு சூப்பர் ஸ்டார் தான்... அது ரஜினி மட்டுமே... தலைவரின் சாதனைகளுக்கு இமயமே எல்லை.." என விதவிதமாக ரைம்மிங்காக புகழ்பாடி வந்தனர். இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 70ஸ் கிட்ஸ் ரசிகர் ஒருவர் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர வைத்துள்ளார். ஜெயிலர் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்ட உற்சாகத்தில் திரையரங்கில் இருந்து வெளியே வந்த அவர், 'ரஜினிகாந்த்யியல்' என்ற ஒன்றை கூறி மிரள வைத்துள்ளார்.

அதாவது, "பத்தாம் வகுப்பு பாடத்தில் தமிழ், இங்லீஷ், வரலாறு, புவியியல், இயற்பியல், வேதியியல் என இருப்பதை போல, அடுத்ததாக 'ரஜினிகாந்த்யியல்' என ஒன்றை கெமிஸ்ட்ரியில் கொண்டுவர வேண்டும்" என பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ரஜினிக்கு இப்படியான 70ஸ் கிட்ஸ் ரசிகர்கள் இருக்கும் வரை அவர் தான் நிரந்தரமான சூப்பர் ஸ்டார் என ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், #JailerDisaster என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X